பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 புத்தர் போதனைகள் பிக்குகளே உணர்ச்சி என்பது என்ன? உணர்ச்சி ஆறு தொகுதிகளாயுள்ளது, கண், செவி, காசி, கா, உடல், மனம் ஆகிய ஒவ்வொன்றின் சம்பந்தத்தினாலும் ஏற்படும் உணர்ச்சி. இது உணர்ச்சி எனப்படும். செய்கைகள் என்பவை யாவை? செய்கைகள் மூன்று வகை: உடலின் செய்கை, வாக்கின் செய்கை, மனத்தின் செய்கை. இவை செய்கைகள் எனப்படும். பேதைமை என்பது என்ன? துக்கத்தைப் பற்றியும், துக்கம் தோன்றுவதைப் பற்றியும், துக்கத்தை நீக்குதல் பற்றியும், துக்கத்தை ரீக்கும் மார்க்கத்தைப் பற்றியும் அறியாதிருத்தல். இது பேதைமை எனப்படும். ஆகவே, பிக்குகளே செய்கை கள் பேதைமையைச் சார்பு கொண்டு ஏற்படுகின்றன. உணர்ச்சி செய்கைகளைச் சார்புகொண்டு ஏற்படு கின்றன. இவ்வாறே மற்றவைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறே தோன்றுகிறது துக்கம் அனைத்தும். ஆனால் பேதைமை அடியோடு மறைக்தொழிவதி லிருந்து செய்கைகளும் தீர்ந்து விடுகின்றன; செய்கை கள் தீர்வதிலிருந்து உணர்ச்சி தீர்ந்து விடுகின்றது, இவ்வாறே மற்றவையும் தீர்ந்து விடுகின்றன... இவ்வாறு துக்கம் அனைத்தும் தீர்ந்து போகின்றது.' 暫