பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதன்னைகள் 1.23 'படைக்கப் பெற்ற யாவும் துக்கமானவை.-இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவ தில்லை; இதுவே விசுத்தி மார்க்கம்.' 'படைக்கப் பெற்ற யாவும் அகாத்மம். -இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவதில்லை; இதுவே விசுத்தி மார்க்கம். மனிதன் பல பொருள்களின் சேர்க்கையாக விளங்குவோன் அல்லவா? கந்தங்கள் என்று கம் முனிவர்கள் கூறும் பல தாதுக்களின் சேர்க்கையாகவே காம் இருக்கிறோம் அல்லவா? மனிதன் துால உருவை யும், உணர்ச்சியையும், சிந்தனா சக்தியையும், (நன்மை தீமைகளை) அறியும் ஆற்றலையும் பெற்றிருக்கிறான். 'கான் இருக்கிறேன்’ என்று மக்கள் கூறும்போது குறிப்பிடும் ஆணவம் கந்தங்களுக்குப் பின்னால் தங்கி நிற்கும் தனிப் பொருள் அன்று. மனம் உளது; உணர்ச்சியும் சிந்தனையும் உள, உண்மையும் உளது; ரீதியான வழியில் மனம் செல்லும்போது அதுவே உண்மையாகும். மனிதனின் சிக்தனையைத் தவிர, அதற்குப் புறம்பாக கான்' என்று கருதத்தக்க தனி யான ஆன்மா ஒன்று இல்லை. ஆணவம் தனித் அநாத்மம்-ஆன்மா இல்லாதவை; உலகில் எல்லாம் அநித்தம், துக்கம், அநாத்மம் என்பது பெளத்த தருமத்தின் அடிப்படை க் கொள்கை. ஒவ்வொரு மனிதனுக்கும், ஜந்து வுக்கும் அழிவில்லாத தனி ஆன்மா ஒன்று இல்லை என்பதே , அநாத்மம்' என்பதன் பொருள்.