பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 125 பேதைமையாலும் மயக்கத்தாலுமே மனிதர்கள் தங்கள் ஆன்மாக்கள் தனித்தனியானவை என்றும், (எவ்விதச் சார்புகளுமில்லாது, சுயமாக) நித்தியமா யுள்ளவை என்றும் கனவு காண்கிறார்கள்.' பேதை தன் தனி ஆன்மா' என்ற கருத்தை மேற் கொள்கிறான்; ஆனால் ஞானி அதற்கு ஆதாரமில்லை என்று காண்கிறான். இதனால், அவன் உலகைப் பற்றிய சரியான கருத்தைப் பெறுகிறான்; துக்கத்தால் ஒன்றுசேர்க்கப் பெற்றவை யாவும் மீண்டும் அழிவுறும் என்றும், உண்மை ஒன்றே நிலைத்திருக்கும் என்றும் அவன் சரியாக முடிவு செய்கிறான்.'