பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 . மரணம் உறக்கத்தில் ஆழ்ந்துள்ள கிராமத்தைப் பெரிய வெள்ளம் அடித்துக்கொண்டு போகிறது; அதுபோல், மனிதன் (வாழ்க்கையில் இன்பங்களாகிய) மலர்களைப் பறித்துக் கொண்டு அதிலே ஈடுபட்டிருக்கும் போதே, மரணம் அவனை அடித்துக் கொண்டு போய் விடுகிறது.' 牵 மனிதன் (இன்ப) மலர்களைப் பறித்துக்கொண் டிருக்கும்போது, அவன் இன்பங்களில் திருப்தியடையு முன், மனம் கலக்கமுற்றிருக்கும் போதே, மரணம் அவனை வென்று விடுகிறது.' மனிதன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது; தப்பித்துக்கொள்ளும் இடம் பரந்த வானத் திலும் இல்லை, ஆழ்ந்த கடலிலும் இல்லை, மலையின் குகைகளிலும் இல்லை."

எமனால் பிடிக்கப்பட்ட ஒருவனை அவன் பெற்ற மக்கள் காக்க முடியாது; தந்தையும் தமர்களும் காக்க முடியாது; உற்றாரை கம்பியும் பயனில்லை." இந்த உலகத்தில் அகித்தியமான மனிதர்களுடைய வாழ்வு துன்பமும் வேதனையும் கலந்து அற்பகாலமே உள்ளது. ஏனெனில், பிறந்தவர்கள் (யாவரும்) மரணத்தை விலக்குவதற்கு எவ்வித வழியுமில்லை; முதுமை யடைந்ததும் மரணமே ஏற்படுகின்றது; உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திற்கும் இதுவே இயல்பாகும்."