பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 135 உலகம் அந்த உலகம் என்று இல்லாத, சூரியன் சந்திரன் இரண்டும் இல்லாத ஓர் இடம் இருக்கின்றது. அதை வருதலும் போதலு மற்றது என்றும், கிற்றல், இயங்குதல், ஒய்வுறுதல், மரித்தல், பிறத்தல் ஆகிய எங்கிலையுமற்றது என்றும் கான் கூறுகிறேன். அதற்கு நிலையுமில்லை, சலனமுமில்லை, ஆதரவு மில்லை. அதுவே துக்கத்தின் முடிவு." 砷 ஓ பிக்குகளே! பிறப்பற்ற, ஆரம்பமற்ற, சிருஷ்டிக் கப்படாத, உருவாகாத ஒன்று இருக்கிறது. அப்படி ஒன்றில்லையானால், பிறப்புள்ள, ஆரம்பமுள்ள, சிருஷ்டிக்கப்பட்ட, உருவுள்ள உலகிலிருந்து தப்பித் துக் கொள்ளவே முடியாமற்போகும்." 带 எந்த மனிதன் ('கான்' என்ற) தனித் தன்மையை ஒழிக்கும் வகையில் தன் இதயத்தைச் செலுத்து கிறானோ, அவன், கங்கையின் பெருவெள்ளத்தில் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு அபாயமின்றி நீந்திச் செல்லும் பலவானைப்போல், இன்பமாயும், களிப்புட னும், உற்சாகத்துடனும் இருப்பான்.' (முற்றும்)