பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் பெளத்தத் திருமுறைகள் பாலி மொழியிலுள்ள பெளத்த திருமுறைகளுக் குத் திருபிடகங்கள் என்று பெயர். பிடகம் என்றால் கூடை, திரி என்றால் மூன்று. எனவே மூன்று கூடை களில் அவை நிறைந்துள்ளன். திரி விட்கங்க்ளாவன: சுத்த பிடகம், விகய பிடகம், அபிதரும பிடகம். சுத்த பிடகம்: இது தீக கிகாயம், மஜ்ஜிம நிகாயம், சம்யுத்த கிகாயம், அங்குத்தர நிகாயம், குத்தக கிகாயம் என ஐந்து கிகாயங்கள் அல்லது தொகுதி களைக் கொண்டது. தீக கிகாயத்தில் 3 வக்கங்களும், மஜ்ஜிம நிகாயத்தில் 15 வக்கங்களும், சம்யுக்த நிகாயத் தில் 5 வக்கங்களும், அங்குத்தர கிகாயத்தில் 11 கி.பாதங்களும் உள்ளன. குத்தக நிகாயம் 15 சிறு நூல்களைக் கொண்டது. அந்நூல்கள் வருமாறு : குத்தக வாடம் தம்மபதம் உதாநம் இதிவுத்தகம் சுத்தநிபாதம் விமானவத்து பேதவத்து தேரகாதை தேரிகாதை ஜாதகம் நிக்தேசம் படிஸம்பிதாமக்கம் அவதானம் புத்தவம்சம் சரியாபிடகம் விகய பீடகம்: இது பிக்குகள் பிக்குணிகளுடைய ஒழுக்கங்களுக்குரிய விதிகளைத் தொகுத்துக் கூறு வது. இதன் மூன்று பகுதிகள் சுத்தவியங்கம், கர்தகை, பரிவாரம். அபிதரும பிடகம்: சுத்த பிடகத்தில் கூறப்பெற் றுள்ள தருமத்திற்கு இது விளக்கமாக அமைந்துள் ளது. இதன் ஏழு பகுதிகளாவன: தர்ம சங்காணி விபங்கம் தாதுகதை புக்கலபண்ணத்தி கதாவத்து யமகம் பட்டானம் வேறு பாலி நூல்கள் மிலிந்த பக்ஹா. விசுத்தி மக்கம், நெத்திப் பகர னம், கிதான கதை. முக்கியமான மகாயான நூல்கள் லலித விஸ்தரம், சத்தரும புண்டரீகம், இலங்காவ தாரம், புத்த சரிதை, சூத்திரம், அபிதருமம், விநயம்,