பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 புத்தர் போதனைகள் அறியாமையுடன் அடக்கமில்லாமல் நூறு வருடம் ஒருவன் வாழ்வதைக் காட்டிலும், ஞானத்தோடு தியானம் புரிந்துவரும் ஒருவன் ஒரு காள் வாழ்வதே மேலானது.ா இந்த உலகம் அரசனுடைய அலங்கரிக்கப்பெற்ற தேர்போல் ஜொலிப்பதை வந்து பார்! பேதைகள் இதிலே ஆழ்ந்துவிடுகிறார்கள். ஞானிகளுக்கு இதிலே பற்றில்லை." ஞானமில்லாதவ னுக்குத் தியானம் இல்லை; தியானமில்லாதவ னுக்கு ஞானம் இல்லை. தியானமும் ஞானமும் சேர்ந்திருப்பவனே கிருவானத்தின் பக்கம் இருக்கிறான்.