பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புத்தர் போதனைகள் 7. பயனில்லாதவற்றைப் பேசிப் பொழுதை வினாக்க வேண்டாம், குறித்த விஷயத்தைப் பற்றிப் பேசுக, அல்லது மெளனமாயிருங்கள். - 8. பேராசைப்பட வேண்டாம்,மற்ற மக்களுடைய இன்பங்களைக் கண்டு மகிழ்ச்சியடையுங்கள். 9. உள்ளத்திலிருந்து துவேஷத்தை அகற்றுக; வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டாம்; உயிருள்ள ஜந்துக்கள் அனைத்தையும் அன்பால் அனைத்துக்கொள்ளுங்கள். 10. உள்ளத்திலுள்ள அறியாமையை அகற்றுக. உண்மையை அறிய ஆவல் கொள்க-முக்கியமாக எந்த விஷயத்தில் மெய்யை அறிய வேண்டுமோ அதில் கவனமாக இருங்கள்; இல்லாவிடில் நீங்க அவகம்பிக்கை அடைய நேரும். அல்லது தவறுகள் செய்ய நேரும். அவாகம்பிக்கை உங்களுக்கு அலட்சிய பாவத்தை உண்டாக்கிவிடும். தவறுகள், நீங்கள் வழி தவறிச் செல்லும்படி செய்து விடுபவை; இவைகளால் கித்திய மான வாழ்வுக்குரிய உன்னதமான மார்க்கத்தை நீங்கள் கண்டு கொள்ள முடியாமற் போகும்.82