பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புத்தர் போதனைகள் அவ்வாறே புண் ணியம் செய்தவன் இவ்வுலகை விட்டு மறு உலகம் செல்லும்போது, அவன் செய்த புண்ணியங்கள் (முன்னதாக அங்கே சென்று), சுற்றத் தார் அன்பன் திரும்பிவருகையில் வரவேற்பது போல, அவனை அங்கே வரவேற்கின்றன.'

கல்லோர், இமயமலையைப்போல், நெ டுந்துாரத்தி லிருந்தே பிரகாசிக்கின்றனர்; ஆனால் தியோர் இரவின் இருளுடு எய்த அம்புகளைப் போல், கண்ணுக்கே புலனாவதில்லை. o ...தானம், ஒழுக்கம், தன்னடக்கம், ஆணவத்தை அடக்கல் ஆகியவை ஆணுக்கும் பெண்ணுக்கும் அரிய புதையல் தனமாகும். மற்றவர்கள் அதை எடுத்துக்கொள்ள முடியாது: திருடர்கள் அதைத் திருடிக் கொண்டுபோக முடியாது. ஞானி கற்கருமங்களைச் செய்து வரட்டும்; ஒருவருக் குப் பின்னால் தொடர்ந்து செல்லக் கூடிய புதையல் அது ஒன்றுதான்.' இந்தப் புதையலிலிருந்து இம்மையிலே செழிப்பும், மறுமையிலே பேரின்பமும், கிருவான முக்தியும் பெற முடியும். தெளிவான கற்காட்சி, உள்ளத்தின் விடுதலை, சிடன் அடைய வேண்டிய பயிற்சிகளின் கிறைவு, தனக்குத் தானே ஞான ஒளி பெறுதல் ஆகியவை அனைத்தும்-புத்த நிலைகூட-இந்தப் புதையலி லிருந்து கிடைக்கும்.