பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. தானம் தானம் செய்பவன் உள்ளக்களிப்புடன் அமைதி பெறுகிறான்; அவ னுக்குக் கவலையுமில்லை, சஞ்சலமு மில்லை." - செல்வத்தைச் சேர்த்து வைக்கும் கருமி பாவத் தையே மூட்டை கட்டிச் சேர்த்து வைத்து, முடிவில் எல்லாவற்றையும் இழக்கிறான்'

நெருப்புப் பற்றிய பொக்கிஷத்தில் மிஞ்சி யிருப் பவைகளை அள்ளியெடுப்பது போல், பிறருக்குச் செல்வத்தை அள்ளிக் கொடுக்கவேண்டும்." 를 செல்வம் தானாகத் தீமை பயப்பதில்லை; அதிலே பற்றுவைத்து, அதனுடன் ஒட்டிக்கொள்வதுதான் கூடாது பற்றுக்கொண்டு உள்ளத்தை விஷமாக்கு வதைவிட, அதை உதறிவிடுவதே கலம்' 蟾 கருமிகளே தேவர் உலகை கண்ணுவதில்லை; மூடர்களே ஈகையைப் போற்றுவதில்லை. ஆனால் ஞானி, ஈகையில் இன்புற்று, (அதனால்) மறு உலகி லும் சுகமடைகிறான்." 崇 சகல தானங்களையும் தரும தானமே வெல்கிறது: சகல இனிமைகளையும் தரும இனிமை வெல்கிறது; சகல இன்பங்களையும் தரும இன்பம் வெல்கிறது; சகல துன்பங்களையும் அவாவின்மை வெல்கிறது." 举