பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ பிக்குகளே! எனக்குப் பணிவிடை செய்யும் எவரும் நோயாளியான மனிதனுக்குப் பணிவிடை செய்யவேண்டும்." - 통 அன்போடு இடைவிடாமல் செய்து வரும் ஊழியங் களின் மூலமாகவே கித்தியமான வாழ்வைப் பெற முடியும். கருணையாலும் தானத்தாலுமே பூரணத் துவம் அடையலாம்.' o தயாளமுள்ள ஈகையாளனை எல்லோரும் விரும்பு கின்றனர்; அவனுடைய கட்புக்குப் பெரிய மதிப்பு உண்டு; மரிக்கும் போதும் அவன் இதயம் சாந்தியும் மகிழ்ச்சியும் பெற்று விளங்கும்; அவனுடைய தானங் கள் மலர்ந்து கனியாகி அவனுக்குப் பயனளிக் கின்றன.ாக + நமது உணவை (ப் பிறருக்கு) அளிப்பதால், நாம் அதிக வலிமை பெறுகிறோம்; மற்றவர்களுக்கு உடை கள் அளிப்பதால், நாம் அதிக அழகு பெறுகிறோம்; பரிசுத்தமான, சத்திய நிலையங்களை நிறுவுவதால், நாம் அரிய பொக்கிஷங்களை அடைகிறோம்: இதை உணர்ந்து கொள்வதுதான் கஷ்டம்." 통 வாழ்க்கையில் உனக்கு அமைந்த நிலையிலே தங்கி யிருக்கவும்; உன் முயற்சிகளைக் கருத்தோடு செய்து வரவும். வாழ்க்கையும், செல்வமும், செல்வாக்கும் மக்களை அடிமைப்படுத்துவதில்லை; ஆ ன ா ல் வாழ்க்கை, செல்வம், செல்வாக்கு ஆகியவைகளை ஆசையோடு பற்றிக் கொள்ளலே அடிமைப்படுத்து கின்றது." புத்.-4