பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புத்தர் போதனைகள் அல்லது, அவன் புறங்கூறுவோனா யிருக்கிறான். அவன் கேள்விப்படுகிற விஷயங்களை ஒரிடத்தி லிருந்து வேறிடத்திலே பரப்புகிறான். அதன்மூலம் (மக்களிடையே) பிளவை உண்டாக்குகிறான். கட்பு முறைகளை அவன் தகர்க்கிறான். சமாதானப் படுத்து வதற்குப் பதிலாக, அவன் சண்டைகளை மூட்டிவிட்டு, அவைகளில் ஆனந்தமடைகிறான். அல்லது, அவன் கடுஞ் சொற்களைப் பேசுவான், முரட்டுத் தன்மையும், வெறுப்பும், கொடுமையுமுள்ள பேச்சைப் பேசுவான். அவ னுடைய சொற்கள் கிந்தனையாகவும் உள்ளன. அல்லது, அவன் பயனற்ற பேச்சுப் பேசும் சோம்பேறியாக இருக்கிறான்; அடக்கமோ, ஒழுக் கமோ அவனிடம் இல்லை. அவனுடைய பேச்சு மதிப்பற்றது, சக்தர்ப்பத்திற்குப் பொருத்தமற்றது, யாதொரு பயனுமற்றது.*