பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 16Ꮥ1 ஆச்சரிமானதா யிருப்பதைக் கொண்டு, அது ஒரு தேவ னாலோ, வேறு அற்புதத் தேவதையாலோ, தோற்று விக்கப்பெற்றது என்று கம்பவேண்டாம். ஒரு விஷயத் தைக் கண்ணால் கண்டு, கருத்தால் ஆராய்ந்து, அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாயும், சகலருக்கும் நன்மை பயக்கக் கூடியதாயும் இருந்தால், அதை ஏற்றுக் கொண்டு, அதன்படி நடக்கவும்." - - + முதலாவது கமக்குத் தேவையானது லம்மா திருஷ்டி' (என்ற கற்காட்சி). ஐயம், திரிபுகளுள்ள கொள்கைகளை நீக்கி, உண்மையைக் கண்டுகொள்ள அதுவே உதவியாகும். அதன் பின்பு அவாவின் பிடி யிலிருந்து விடுதலை பெறுதல் எளிது.ால் 景 பொய்யில் மெய்யைக் கற்பனை செய்து கொண்டு மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையார் மெய்ப் பொருளை ஒரு போதும் அடைவதில்லை; அவர்கள் வெறும் ஆசைகளைத் தொடர்ந்து அலைவார்கள்." மெய்ப்பொருளை உணராமல் ஐயத்தில் உழல் வோனை எதுவும் புனிதமாக்கிவிடாது. ஆடையின்றி அலைதல், சடைத் தலை, புழுதியால் (உடல்) மாசடைதல், உபவாசம், வெறுக்தரையில் கிடத்தல், நீறு பூசுதல், அசைவில்லாமல் அமர்ந்திருத்தல் ஆகிய எதுவும் புனிதமாக்கிவிடாது." o