பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. கொடுங்கோலன் தீய கொடுங்கோலன் ஒருவன் இருந்தான். அக் காலத்தில் தேவேந்திரன் ஒரு வேடனைப் போல உருவெடுத்துக்கொண்டு, மாதலி என்ற அரக்கனைப் பெரிய காயாக உருமாற்றிக் கையிலே பிடித்துக் கொண்டு பூவுலகுக்கு இறங்கி வந்தான். வேடனும் நாயும் கொடுங்கோலனின் அரண் மனைக்குச் சென்றதும், நாய் மிகவும் உரக்க ஊளை யிட ஆரம்பித்தது. அந்த ஒலியினால் அரண்மனையின் அஸ்திவாரமே ஆடத் தொடங்கிற்று. கொடுங்கோலன் வேடனைத் தன் சிம்மாசனத்தின் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தச் செய்தான். காய் பயங்கரமாகக் குரைப்பதன் காரணத்தை அவன் வினவினான். 'காய் பசியாயிருக்கிறது!’ என்றான் வேடன், நடுக்கமுற்றிருந்த மன்னன் அதற்கு உணவளிக்க உத்தரவிட்டான். அரண்மனையில் தய ாரித்திருந்த உணவு முழுதும் காயின் வாய்க்குள் போய்விட்டது; ஆயினும் அது பசியடங்காமல் மேலும் பலமாகக் குரைத்துக் கொண்டேயிருந்தது. அரண்மனை உக்கிராணத்திலிருந்த பொருள்கள் எல்லாம் அதற்கு உண வாக அளிக்கப்பட்டும், அதன் குரைப்பு நிற்கவில்லை. கொடுங்கோலன் மேற்கொண்டு என்ன செய்வ தென்று தெரியாமல், பயங்கரமான அந்த வேடனைப்