பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

чã தர்போதனை கள் 81 கேட்கிறான், உலகைத் துறந்து, மேலான தற்பயிற்சி முறையை மேற்கொள்கிறான். பின்னர் அவன் ஆரியச் சீலங்கள் அனைத்தும் கைவரப் பெற்று, புலன் உணர்ச்சிகளில் அடக்கம் பெற்று, தன்னடக்கத்தோடு கருத்துடனிருந்து, ஒதுக்கமான வாசஸ்தலம், வனம் அல்லது மரத்தின் அடிகிலம், மலை, அல்லது குகை, அல்லது மலைச் சரிவு, அல்லது சுடுகாடு, ஏகாந்தமான தோப்பு, அல்லது திறந்த வெளி, (அமர்வதற்கு) ஒரு வைக்கோற் குவியல்-ஏதாவது ஒன்றைத் தேர்ந்துகொள்கிறான். அங்கே, பிட்சையெடுத்த உணவைப் புசித்து விட்டு, அவன் அட்டணைக் காலிட்டு அமர்ந்து கொண்டு, உடல் நிமிர்ந்து, கருத்துடைமையில் நிலை பெற்று, உலகிலுள்ள ஆசாபாசங்களற்ற சிந்தனை யுடன் தங்குகிறான். இன்னா செய்தல் என்ற கறையை ஒதுக்கிவிட்டு, அவன் அஹிம்சையில் நிலைபெறு கிறான். உயிருள்ள ஒவ்வொரு பிராணியிடத்தும் அன்புள்ள சிந்தனையோடு, அவன் தன் இதயத்தி லுள்ள ஹிம்சை எண்ணங்கள் அனைத்தையும் கழுவித் துய்மை செய்கிறான். மடிமையையும் அயர்வையும் ஒதுக்கிவிட்டு அவன் அவைகளிலிருந்து தப்பியிருக் கிறான். உள்ளொளியை உணர்ந்து, கருத்தோடும், தன்னடக்கத்தோடும், அவன் உள்ளத்தின் சோம்பரை யும் அயர்வையும் துடைத்துச் சுத்தமாக்குகிறான். குழப்பத்தையும் கவலையையும் விட்டு, அவன் சலன மின்றி நிலைபெறுகிறான். உள்ளத்தின் சாந்தியுடன் அவன் கவலையையும் குழப்பத்தையும் நீக்கிச் சுத்தம் செய்கிறான். சந்தேகத்தை ஒழித்து, அவன் சலன மின்றியிருக்கிறான். நன்மையான விஷயங்களைப் புத்.-6