பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புத்தர் போதனைகள் பற்றி எப்படி', 'ஏன்' என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிராமல், அவன் உள்ளத்தைச் சலனமின்றித் து.ாய்மையாக்குகிறான். இவ்வாறு ஐந்துவகைத் தடைகளை" நீக்கி, மேற் கொண்டு எஞ்சியுள்ள ஆளல வங்களையும் ஞானத்தால் அழித்து, புலன்களின் ஆசைகளிலிருந்து விலகி, தீவினைகளிலிருந்து ஒதுங்கி, அவன் கால்வகைத் தியானங்களை மேற்கொள்கிறான். பின்னர், அவன் கண்ணால் ஓர் உருவத்தைப் பார்த் தால், மயக்குகின்ற உருவங்களில் அவன் மேற் கொண்டு ஆசை கொள்வதில்லை. வெறுக்கத்தக்க உருவங்களிலும் அவன் வெறுப்படைவதில்லை. ஆனால் கருத்துடைமையில் கிலைபெறுகிறான். அவ துடைய சிந்தனைக்கு எல்லையில்லை. பயனற்ற பொருள்கள் யாவும் யாதொரு மிச்சமுன்றித் தீர்ந்து போகும் பரிபாக நிலையான இதயத்தின் விடுதலையை, ஞானத்தால் அடையும் விடுதலையை அவன்அறிவான். அவன் திருப்தி, அதிருப்தி இரண்டை யும் தள்ளி விடுகிறான். அவன் உணரும் இன்பகரமான, அல்லது துன்பகரமான, அல்லது இரண்டுமற்ற உணர்ச்சிகளை அவன் வரவேற்பதில்லை, ஏற்றுக் கொள்வதில்லை, அவைகளை விடாமல் பற்றிக் கொள்வதுமில்லை. அதனால் மயக்கம் தீர்கின்றது. மயக்கம் தீர்வதால் பற்று ஒழிகின்றது. பற்று ஒழிவதால் பவம் (கருமத் தொகுதி) ஒழிகின்றது... துக்கம் அனைத்தும் ஒழிவது இவ்வாறுதான்.

  • ஐந்துவகைத் தடைகள் அவா. வெறுப்பு, மடிமை, காவம், மயக்கம்.

_