பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புத்தர் போதனைகள் அடைவீர்கள். நீங்கள் மெதுவாக நிருவானத்திற்கே போய்ச் சேருவீர்கள், கிருவானத்தை கோக்கிய நீங்கள் செல்வீர்கள். ஏன்? ஏனென்றால், பிக்குகளே. ஸம்மா திருஷ்டி (கற்காட்சி) மிதக்தே செல்லும், மேல் நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும், கிருவானத்தை கோக்கியே செல்லும். 'இந்தக் கரை' என்பது (ஒரு வருடைய) அகத்தே அமைந்துள்ள ஆறு புலன்களின் களன்கள். "அந்த கரை' என்பது புறத்தேயுள்ன ஆறு பொறி களின் களன்கள். "கட்டாற்றில் ஆழ்தல்' என்பது மயக்கத்திற்கும் காமத்திற்கும் உரிய பெயர். 'ஒரு திடரில் தட்டி மாட்டிக்கொள்ளல்" என்பது "தான்' என்ற அகங்காரத்தின் பெயர். 'மனிதர் கைகளில் அகப்படுதல்' என்பது என்ன? இல்வாழ்வோன் ஒருவன் சமூகத்திலே வாழ்கிறான் ஆனந்தப்படுவோருடனே (சேர்ந்து தானும்) ஆனந்திக் கிறான். துக்கப்படுவோருடனே (சேர்ந்து தானும்) துக்கிக்கிறான். இன்பமடைவோருடனே (சேர்ந்து தானும்) இன்பம். நுகர்கிறான்.துயரப் படுவோருடனே (சேர்ந்து தானும்) துயரப்படுகிறான். எல்லாவகைத் தொழில்களிலும் சம்பந்தப்படுகிறான். இதுதான் "மனிதர் கைகளில் அகப்படுதல்' என்பது. "மற்றவர் கைகளில் அகப்படுதல்' என்பது என்ன?