பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 85 எவராவது ஒரு பிக்கு தேவர்களுடைய இனங் களிலே ஒன்றில் தாம் பிறக்க வேண்டும் என்றும், "எனது சீலத்தினாலோ, பயிற்சியினாலோ, ஏதாவது தபசினாலோ, துறவு வாழ்க்கையினாலோ ஒரு தேவனாகவோ, அல்லது தேவர்களில் ஒருவனா கவோ தோன்ற வேண்டும்' என்றும் விரும்புதலாகும். இதுவே மற்றவர் கைகளில் அகப்படுதல். “சுழலில் சிக்கிக்கொள்ளல் என்பது ஐம்புலன் களின் இன்பங்களுக்குப் பெயர். (தானாக) உள்ளுர உளுத்துப்போதல் என்பது என் ன? எவராவது ஒருவர் ஒழுக்கக் குறையுள்ளவரா கவோ, தீவினையாளராகவோ, மாசுடையவராகவோ, சந்தேகத்திற்கிடமான கடையுடையவராகவோ, கர வடச் செயல்களுடையவராகவோ இருத்தல்; அவர் துறவற விரதங்களை மேற்கொண்டிருப்பினும், துறவியாகார்; விரதங்களை மேற்கொண்டிருப்பினும், அவர் புனித வாழ்வுடையவராகார்: உள்ளே உளுத்து, ஆசைகள் கிறைந்து, அசுத்தத்திற்குப் பிறந்தவரே அவர். அத்தகையவரே, (தாமாக) உள்ளுர உளுத் துப் டோனவர்.' Ho: (பெளத்த தருமம் ஒரு தேர், பிறவிக் காட்டினுள் சிக்கி அலையும் மக்களை அந்த இரதம் கிருவானப் பேற்றுக்கு அழைத்துச் செல்லும். அதைப் பற்றிய விவரம் இது.) ஞானமடைந்து கம்பிக்கை கொண்டவர் உள் ளத்தை ஒருநிலைப்படுத்தி ஏறிச் செல்லும் இரதம் அது. அது நீதி நெறிமுறைகள் என்னும் பலகைகளால்