பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 புத்தர் போதனைகள் செய்யப்பெற்றது. அதன் ஏர்க்காலாக விளங்குவது அந்தக்கரணம் அல்லது மனச்சான்று; உள்ளமே அதன் நுகத்தடி; ஆனந்தமே அதன் அச்சு: சக்தியே அதன் சக்கரங்கள்; உள்ள நிறைவும் அமைதியுமே இழுத்துச் செல்லும் குதிரைகள்: கருத்துடைமையே கவனமுள்ள சாரதி; அவாவின் மையே இரதத்தின் அலங்காரங்கள்; பற்றற்ற உள்ளத்தில் விளையும் அன்பும் அஹிம்சையுமே பாதுகாப்புக்கான ஆயுதங் கள். பொறுமையே தருமத்தின் கவசம். சாந்தி கிலையத்தை காடி இரதம் உருண்டு ஓடுகின்றது. அந்த இரதம் ஒருவர் தாமே தமக்காகச் செய்துகொள் வது-அதற்கு ஈடும் இல்லை, எடுப்பும் இல்லை. அதிலே அமர்ந்துகொண்டு முனிவர்கள் உலகைவிட்டுச் செல்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் குறித்த வெற்றியை அடைகிறார்கள். ' ஓ பிக்குகளே! கங்கை, யமுனை, அசிரவதி, சர4, மாஹி முதலிய பெருகதிகள் கடலில் கலக்கும்போது தகிகள் பழைய பெயர்களையும், தோன்றிய இடங் களையும், எவ்வாறு இழந்து ஒரே சமுத்திரம் என்று பெயர் பெறுகின்றனவோ, அவ்வாறே கூடித்திரிய, பிராமண, வைசிய, சூத்திரர் என்ற நால்வருணத்தாரும் ததாகதர் உபதேசித்த தருமத்திலும் சீலத்திலும் புகுந்த பின்பு, வீட்டைவிட்டு வீடற்ற வாழ்க்கையை மேற் கொண்ட பின்பு, அவர்களுடைய பழைய காம கோத் திரங்களை இழந்து துறவிகள் என்றே அழைக்கப் பெறுவர்.