பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 87 ஒ. பிக்குகளே! மகாசமுத்திரம் உப்பின் உவர்ப்பை, மட்டுமே கொண்டிருப்பது போல இந்தத் தருமமும் விடுதலை என்ற ஒரே ருசியைக் கொண்டிருக்கிறது." ஒ. பிக்குகளே! அமிதமான இரண்டு வழிகள் இருக் கின்றன; உலகப் பற்றை விட்டவன் அவைகளைப் பின்பற்றலாகாது. உணர்ச்சி காரணமாகவும், முக்கிய மாகப் புலனுணர்ச்சி காரணமாகவும், விரும்புதற் குரிய பொருள்களால் திருப்தியடையும் இழிவான பாமர வழி ஒரு பக்கத்தில் இருக்கின்றது-அது வழக்கமாக இருந்து வரினும், தகுதியற்றது, பயனற்றது, உலகப் பற்றுள்ளவர்களுக்கே பொருத்தமானது. மற்றொரு வழி (உடலைத் துன்புறுத்திக்கொள்ளும்) கடுமை யான கோன்புகளை மேற்கொள்ளும் வழி-இதுவும் வழக்கமாயிருந்து வருகிறது-இதுவும் வேதனை தருவது. பயனற்றது.” 崇 ஒ. பிக்குகளே! பெரிய சாகரத்திலே முத்துக்கள், பலவிதமான மணிகள் கிறைந்திருக்கின்றன. அது போலவே, இந்தத் தருமத்திலும், விகயத்திலும் முத்துக்களும், பலவிதமான மணிகளும் நிறைந்திருக் கின்றன. அவைகளிலே சேர்ந்தவை கான்கு ஸதிப் பிரஸ்தானங்கள், கான்கு ஸம்யக் பிரதானங்கள்,

  • நான்கு ஸதிப் பிரஸ்தானங்கள் (பாலி மொழியில் ஸதிபட்டாணங்கள் என்பர்.) உடல், புலன்களின் உணர்ச்சி கள், மனம், நிருவாணம் (தருமம்) ஆகியவை சம்பந்தமான மனோதத்துவ உண்மைகள். அவை முறையே காயானு பாலனை, வேதனானுபாலனை, சித்தானுபாஸ்னை, தரு மானுபாஸ்னை எனப்படும். -