பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. பெளத்த சங்கம் சத்திய மார்க்கத்திலே செல்லத் தீர்மானிக்கும் ஒரு மனிதன் தனித்து கின்றால், அவன் வலிமை குன்றித் தன் பழைய பழக்கங்களுக்கே திரும்பிவிடக் கூடும். ஆதலால் நீங்கள் ஒன்றுசேர்ந்து இருங்கள், ஒருவர்க் கொருவர் உதவிபுரிந்து கொள்ளுங்கள். ஒருவர் முயற்சிகளை மற்றவர்கள் பலப்படுத்துங்கள்."

சகோதரர்களைப் போல இருங்கள்; அன்பில் ஒன் மாகவும், துறவறத்தில் ஒன்றாகவும், சத்தியத்தை மாடும் ஆர்வத்தில் ஒன்றாகவும் இருங்கள். 출 உலகின் திசைகளிலெல்லாம் சத்தியத்தையும் தரு மத்தையும் பரப்புங்கள்; முடிவில் சகல ஜீவன்களும் தரும ராஜ்யத்தின் குடிகளாக இருக்கும்படி செய்யுங் கள்.? இதுவே புனிதமான சங்கம்; இதுவே புத்தரின் சங்கம்; புத்தரைச் சரணடைந்துள்ளவர் அனைவர்க் கும் ஒருமைப்பாட்டை அமைக்கும் சங்கம் இதுவே!" 톰 சோதரர்களே! நான் சகல பந்தங்களிலிருந்தும் விடுதலை பெற்றுள்ளேன். மானிட இயல்புக்கு மேற் பட்ட பந்தங்கள், மானிடப் பந்தங்கள் யாவற்றிலிருக் தும் விடுதலை யடைந்துள்ளேன். சோதரர்களே, நீங்களும் அமானுஷ்யமான பந்தங்கள், மானிடப் பந்தங்கள்-யாவற்றிலிருந்தும் விடுதலை பெற்றிருக்