பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. பிக்குகள் பகைவனை வென்று வீரத்தை கிலைநிறுத்திய ப்ோர்வீரன் வீரச் சின்னங்களை அணிவான்-அதே போலத் துறவி துக்கம் என்ற பகைவனை வீழ்த்தித் துவராடை என்னும் வீரச் சின்னத்தை அணிவான்." ஆ ஒ. பிக்குகளே! உங்களுக்குத் தருமத்தைப் பற்றித் தெளிவாக அறிவிக்கப் பட்டிருக்கின்றது. அதை நீங்கள் (ஐயம், திரிபு இல்லாமல்) பூரணமாகத் தெரிந்து கொண்டு, அதை அனுஷ்டிக்கவும்! அதைப் பற்றித் தியானம் செய்யவும்! உண்மையான சமயம் கெடுங் காலம் நிலைத்திருப்பதற்காகவும், பெருங்கூட்டமான மக்களுக்கு நன்மையும் இன்பமும் ஏற்படும்படியும், உலகின்மீது இரக்கம் கொண்டும், உயிர் படைத்த சகல ஜீவராசிகளின் கன்மைக்காகவும், ஆதாயத்திற் காகவும், தருமம் நீடித்து நிலைபெறுவதற்காக அதை வெளியே பரவச் செய்யுங்கள்1= - ஒ. பிக்குகளே, வாருங்கள்! உங்களுக்கு மீண்டும் நினைவுறுத்துகிறேன்: ஒன்றாகச் சேர்க்கப் பெற்ற பொருள்கள் (பஞ்ச பூதங்களின் கலப்பால் தோன்று பவை) யாவும் அழியும் தன்மையுள்ளவை. நீங்கள் கருத்தோடு முக்திக்கு வழிதேடுங்கள்!" 将 ஒ. பிக்குகளே, கருத்தோடிருங்கள்! புனிதமா யிருங்கள்! சிந்தனை நிறைந்திருங்கள்! செய்து கொண்ட முடிவில் உறுதியுடன் கில்லுங்கள் உங்க