பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 93 ளுடைய சொந்த இதயங்களையே கன்றாகக் கண் காணித்து வாருங்கள்! எவர்கள் சலனமடையாமல், சத்தியத்தையும் தருமத்தையும் பற்றுகிறார்களோ, அவர்கள் வாழ்க்கைக் கடலைத் தாண்டிவிடுவார்கள்! துக்கத்திற்கு முடிவுகட்டி விடுவார்கள்!" சூரியனும், சந்திரனும், எல்லாமும் அழியக்கூடிய வையே. எல்லாப் புத்தர்களும், எதிர்காலப் புத்தர் களும் அழிவுறக்கூடியவர்கள். கானும் பரி கிருவான மடைந்து விடுவேன். கதிரவன் மேற்கு மலைகளில் ஏறிச் செல்வது போல, மேல் கோக்கிச் செல்லும் (தருமப்) பாதையில் அடிமேல் அடியாக முன்னேறிச் செல்லுங்கள்!" பிக்குகளே, இப்பொழுது கவனியுங்கள்! (சேர்க்கை யாகச்) சேர்ந்துள்ள பொருள்கள் யாவற்றிலும் (பிரிந்து) அழிவுறும் இயல்பு அடங்கியுள்ளது என் பதை நினைவுறுத்தியே கான் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன், உங்களுடைய விமோசனத்திற்காக இடைவிடாமல் கருத்தோடு உழையுங்கள் 1**

மனமாசுகள் நீங்கி, எவன் சகல சீலங்களிலும் நிலைத்து ாகின்று, அடக்கமும் உண்மையும் உள்ள வனோ, அவனே சீவர உடைக்கு உரியவன்.' + ==

  • இந்த உபதேசமே புத்தர் பெருமான் சீடரிகளுக்குக் கடைசியாகக் கூறிய உபதேசமாகும்.