பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 புத்தர் போதனைகள் தர்ப்பைப் புல்லைத் தவறாக இழுத்தால் அது கையை அறுத்துவிடுகிறது; அதுபோல், தீய வழியில் பயிலும் துறவறமும் ஒருவனை நரகில் சேர்க்கின்றது." o ஒ. பிக்கு இந்த ஒடத்தைக் காலியாக்கு; பாரம் குறைந்தால் இது இலகுவாக ஒடும். விருப்பையும் வெறுப்பையும் சேதித்துவிட்டால், நீ விடுதலைப் பேற்றை அடைவாய். o பிக்குகளே! வஸ்ஸிகைச் செடி வாடிப்போன மலர் களை உதிர்த்து விடுவதுபோல், நீங்களும், விருப்பு வெறுப்புகளைக் கைவிட்டுவிட வேண்டும்.' 舉 உடலில் அமைதி, பேச்சில் அமைதி, உள்ளத்தில் அமைதியுடன், கிதான நிலை பெற்று, உலகின் ஆசைத் துாண்டுதல்களை ஒழித்த பிக்குவே உபசாந்தி பெற்ற வன் என்று கூறப்படும்." { இளவயதா யிருப்பினும், புத்த தருமத்தில் மன மகிழ்ச்சியுடன் ஈடுபடும் பிக்கு, மேகத் திரையிலிருந்து விடுபட்ட வெண்மதி போல, இவ்வுலகில் ஒளியைப் பரப்புகிறான்."

ஒ. பிக்கு உன்னை நீயே துண்டிக்கொள்: உன்னை நீயே சோதனை செய்துகெர்ள். உன்னை நீயே தற்காப்புச் செய்து கவனமா யிருந்தால், நீ இன் புற்று வாழ்வாய்." o