பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 99 இகத்திலும் பரத்திலும் எதிலும் ஆசையற்றவன் எதிலும் காட்டமற்றவன், தளைகளற்றவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன்.' {} மூன்று வேதங்களையும்* கற்றுணர்ந்த பிராமணர் கள் சொல்வது இதுதான்: 'எங்களுக்குத் தெரியாத நாங்கள் பார்த்திராத ஒன்றை அடைவதற்கு காங்கள் வழி காட்ட முடியும்; இதுதான் கேர் பாதை, இதன்படி செல்பவன் பிருமத்தோடு ஐக்கியமாவதற்கு இதுவே நேரான மார்க்கம் என்று காங்கள் கூற முடி: யும்.'"... தாங்களே அறியாத, பார்த்திராத பிருமத்தோடு ஐக்கியமாவதற்குப் பிராமணர்கள் வழிகாட்டுதல். என்பது உலக இயல்புப்படி கடவாத காரியம்! ... குருடர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு கிற்கையில், முதலில் இருப்பவரும் பார்க்க முடியாது, நடுவில் இருப்பவரும் பார்க்க முடியாது, கடைசியில் இருப்பவரும் பார்க்க முடியாது என்பதைப் போலவே, இந்தப் பிராமணர்களுடைய பேச்சும் இருப்பதாக пътст கருதுகிறேன். முதலில் இருப்பவரும் காணவில்லை, நடுவில் இருப்பவரும் காணவில்லை, கடைசியில் இருப்பவரும் காணவில்லை. ஆகவே இந்தப் _ --

  • புத்தர் காலத்தில் மூன்று வேதங்களுக்குள்ளேயே நான்காவதான அதர்வண வேதமும் சேர்ந்திருந்தது; வேதங் கிளை மூன்றாகவும். நான்காகவும் குறிப்பிடுவதுண்டு. i