பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறிஸ்து தாம் சொல்லியவண்ணமே செய்து காட்டினார். அவருடைய செய்தி உலகுக்குப் புதுமையாகவும் புரட்சியாகவும் இருந்தது. செல்வங்களைக் கைவிட்டு ஏழை பணக்காரரென்ற பேதங்களை ஒழித்து, எல்லோரும் சுதந்திரமாக அன்பு பூண்டு, சமத்துவமான சகோதரர்களாக வாழ்தல் என்பது அன்றுபோல் இன்றும் புரட்சிகரமாகவே யுள்ளது. இரண்டு யசமானர்களுக்கு உளழியஞ் செய்ய முடியாதென்று அவர் கூறினார். வாயால் ஒரு யசமானரை - கடவுளைப் புகழ்ந்துவிட்டு, வயிற்றுக்காக மற்றொருவருக்கு சயித்தானுக்கு ஊழியம் செய்வதையே பெரும்பாலான மக்கள் மேற்கொள்கின்றனர். இதைக்கண்ட அறிஞர் ஒருவர் உலகில் ஏக ஒருவரே உண்மையான கிறிஸ்தவயிருந்தாரென்று கருதினார். உலகிலே ஒயே கிறிஸ்தவர் இருந்தார். அவரும் சிலுவையிலே மாண்டுபோனார் என்று அவர் குறித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற பெர்னாட்ஷாவும் இது போலவே அபிப்ராயப்பட்டிருக்கிறார். 'இந்த மனிதர் (கிறிஸ்து) இன்னும் தோல்வி பெறவில்லை, ஏனெனில் அவர் வழியைப் பரீட்சை செய்து பார்ப்பதற்குக் கூட புத்தியுள்ள ஒரு நபர் இதுவரை தோன்றவில்லை' என்று அவர் கூறினார். ஆனால் நம் காலத்திலேயே ஒரு மனிதர்ஏசு வழியைப் பரீட்சை செய்து பார்த்து விட் பர்| '... காந்தியை நினைக்கும்போது, நான் ஏசு கிறிஸ்து வையே நினைக்கிறேன். இவர் அவர் வாழ்க்கையையே வாழ்கிறார். அவர் வார்த்தையையே பேசுகிறார், (அவரைப் போலவே) துயரப்படுகிறார். இடைவிடாது முயற்சி செய்கிறார், பூமியிலே அவரு ை ய பாஜியத்திற்காக என்றாவது ஒரு நாள் சிறப்பாக மடிவார்' என்று அமெரிக்கப் பாதிரியான ஹோம்ஸ்"பல்லாண்டுகட்கு முன்னரே குறிப் பி டி ருந்தார். 'என்றாவது ஒருநாள் h என்று அவர் குறிப்பிட்ட நாள் கி.பி. 1918, ஜனவரி 30 ம் தேதியாக முடிந்தது! 'சிறப்பாக மடிவார்' என்று அவர் கற்பனையாகக் கூறியது உண்மையிலேயே நடந்தது. காந்தியடிகள் நெஞ் லே குண்டுகளைத் தாங்கி மடிந்தார் ஜார துஷ்டிரர் தொழுகையிலிருக்கும்போது கொலையுண்டார். ஏசு நன்றாகத் தொழுதுவிட்டு, மாண யாத்திரைக்குத் தயாராகப் புறப்பட்டுச் சென்றார். மகாத்மா தொழுகைக்குச் செல்லும் பாதையிலேயே சுடப்பட்டார்: கிறிஸ்தவ சமயத்தில் பின்னால் ஏற்பட்ட 'சர்ச் ஸ்தாபனங்கள் விரிவான தத்துவ நூலையும், விதிகளையும் அமைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளில் ஏசு நாதரின் சீரிய சீலங்களுக்கும் கொள்கைகளுக்கும் இடமில்லையென்றும், அவைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கோட்பாடுகளை மக்கள் மீது திணிப்பதற்காக அன்புநெறியைக் கைவிட்டுப் பலாத்காரத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களைச் சித்திரவதை செய்தும், கொன்றும், நெருப்பிலிட்டு வதைத்தும்

  • Rev. J. / / / /O//77es, Wew York.

100 0 புத்த ஞாயிறு