பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல பெரியோர்களில் நபி பெருமானின் சரித்திரம் மிக விரிவானது. நம்பத் தகுந்தது. சந்தேகத்திற்கு இட மில்லாததென்று பலராலும் அங்கீகரிக்கப் பட்டது . அவர் காலத்தில் அரேபியா மிகவும் பிற்போக்கு நிலையிலிருந்தது. மக்களிடையே கல்வி பெருகியிருக்கவில்லை. அவர்கள் இரவும் பகலும் சூதாடுவதும், சாராயம் குடிப்பதும் வழக்கமாயிருந்தது. ஒழுக்கம் சீர்குலைந்திருந்தது. பெண்களின் நிலை பரிதாபமாயிருந்தது. ஆடவர் விருப்பம்போல் எத்தனை பெண்களை வேண்டுமாயினும் விவாகஞ் செய்துகொண்டு, வேண்டாதபோது அவர்களை விரட்டி விடலாம். சண்டைகளில் யுத்த தருமம் என்று ைெடயாது. எதிரிகளிலே சிறைப்பட்ட பெண்கள், குழந்தைகள்கூடச் கொலைச் செய்யப் பெற்றனர், அல்லது தீயிலே தள்ளப்பட்டனர். அடிமைகள் விலங்குகளைப்போல் நடத்தப்பட்டனர். விலங்குகளும், இரக்கமின்றிக் கொடுமையாக நடத்தப்பட்டன. ஜனங்கள் உண்மையமான சமயவாழ்க்கையில் ஈடுபடவில்லை. பெயரளவில் யூத மதமும் கிறிஸ்தவ மதமும் அங்கே இருந்து வந்தனவேயன்றி, மக்கள் கண்ட சிலைகளையெல்லாம் வணங்கி வந்தனர். நாடு முழுதும் மூடக்கொள்கைகளும், மூடப்பழக்க வழக்கங்களும் நிறைந்திருந்தன. இத்தகைய மக்களை ஒன்று சேர்த்து, ஒழுக்கத்தை நிலைநாட்டி, விக்கிரக வணக்கத்தை ஒழித்து, ஒரே தெய்வத்தின் வணக்கத்தை ஏற்படுத்தி, எல்லோரும் சமம், எல்லோரும் சகோதரர்கள் என்ற கொள்கையைப் பிரசாரஞ் செய்து, பெண்களுக்குச் சொத்துரிமையும், பிற உரிமைகளும் அளித்து, குர்ஆன் வேதத்தையும் தம் அறவுரைகளையும் கொண்டு ஒரு புதுவாழ்வை உண்டாக்கியவர் முகம்மது நபி. இவற்றிற்காக அவர் பட்ட பாடுகளும், அடைந்த துன்பங்களும் அளவற்றவை. ஆனால் முடிவில் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு, அவரையே வழிகாட்டியாகக் கொண்டனர். அவருடையதாய் அமீனா, தந்தை அப்துல்லா. அவர் பிறக்கும் முன்பே தந்தையை யிழந்து, ஆறாவது வயதில் அன்னையையும் இழந்தார். அவருடைய பாட்டனார் அப்துல் முத்தலிப். அவரை அன்போடு வளர்த்துவர ஏற்பாடு செய்திருந்தார். சிறு வயது முதலே முகம்மது எல்லோரிடத்திலும் அன்புகொண்டு நேர்மையோடு வாழ்ந்து வந்தார். மூன்று வயதிலிருந்தே அவர் ஆடுகள் மேய்க்கச் சென்றுவந்தார். பின்னால் தமது குலத்தினர் செய்துவந்த வியாபாரத் தொழிலை மேற்கொண்டார். தம் நாட்டவரை எப்படி மேல்நிலைக்குக் கொண்டு வருவது என்ற எண்ணம் அவருக்குப் பல வருடங்களாக இருந்துவந்தது. அவர் ஏகாந்தமாயிருந்து பிரார்த்தனை செய்யும்பொழுது இதைப்பற்றி ஆண்டவனிடம் முறையிடுவாராம். மக்கா நகருக்கு மூன்று மைல்

  • ஜனாப் மு.ந.ஹாஜி முகம்மது சாஹிப் - திருநபி சரித்திரம்'

ப. ராமஸ்வாமி ை 1 C)Յ