பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரத்திலிருந்த ஹிரா என்னும் குகையிலேதான் அவர் தனியேயிருந்து சிந்தனை செய்வது வழக்கம். ஒவ்வொரு வருடமும் ரமலான்மாதம் முழுதும் அங்கேயே தங்கித் தியானத்திலிருப்பாராம். அந்தக் குகையிலேதான், அவருடைய நாற்பதாவது வயதில், குர்ஆன் வேதத்தின் முதற்பகுதி ஆண்டவனால் அவருக்கு அறிவிக்கப் பெற்றது. அதன் பின்புதான் அவர் இஸ்லாம் மார்க்கத்தைப் போதிக்க ஆரம்பித்தார். முதலில் அவருடைய மனைவி கதீஜா நாயகி அவரை ஆண்டவன் துதராக ஏற்றுக்கொண்டார். பின்பு முகம்மது தன் நெருங்கிய உறவினர்களுக்கு அறிவித்தார். மூன்று வருடம் அவர் ஒதுக்கமாயிருந்து செய்துவந்த பிரச்சாரத்தில் 40 பேர்களே இஸ்லாம் மார்க்கத்தை மேற்கொண்டனர். நான்காவது ஆண்டு முதல் அவர் வெளிப்படையாகப் போதிக்க முற்பட்டார். இதனால் அவருடைய குலத்தினராகிய குறைவியர் அவருக்கும், புதிதாய்ச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும் பல கொடுமைகளைச் செய்து வந்தனர். அவர், எதற்கும் அஞ்சாமல், எவருடனும் சண்டையிடாமல், தமது கடமையைச் செய்துகொண்டே யிருந்தார். நபியின் பியசாயம் ஆடம்பர மற்ற, அடக்கமான முறையில் அமைந்திருந்தது. ங்களிலே விவாதம், தத்துவச் சண்டைகள் முதலியவற்றை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. அவர் ஊர் ஊராகச் சென்று தம் செய்திகளை மக்களுக்கு அறிவித்துவந்தார். திருவிழாக்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று அவர்இஸ்லாத்தைப் பற்றி போதித்து வந்தார். அவருடைய தோற்றமும், எளிய வாழ்க்கையும், நற்குணங்களும் மக்களின் மனத்தைக் கவர்ந்தன. குறைவியர் செய்த கொடுமைகளை அவர் பொறுமையோடு தாங்கி வந்ததைக் கண்டும், பலர் அவரோடு சேர்ந்தனர். மேலும் அவருடைய மார்க்கத்தில் சேர்ந்தவர்களுடைய வாழ்க்கை நன்மையான முறையில் மாறியிருப்பதைக் கண்டும், பலர் அவரை அண்டி வந்தனர் .அவருடைய உபதேசங்கள் வேரூன்ற ஆரம்பித்ததும், குறைவிகள் அவரை அமைதியாக வாழ விடவில்லை. இஸ்லாம் மார்க்கத்தால் அவர்களுடைய சிலை வணக்கம் முதலிய பழைய வழக்கங்கள் அழிந்து ஒழியுமென்று பயந்தனர்; நபியை ஒழித்துவிட்டால், புதிய மார்க்கம் பரவாதென்று கருதினர். அவரைக் கொலை செய்யவும் ஏற்பாடு செய்தனர். எனவே முகம்மது நகரைவிட்டு வெளியேற நேர்ந்தது. நகரையும் நகர மக்களையும் பிரிந்து செல்லவே அவருக்கு மனம் வரவில்லை. இந்நகரை ஆவலோடு நோக்கி, மக்கா! உலகனைத்தினும் நீயே எனக்குப் பிரியமான இடம், ஆனால் உன் மக்கள் என்னை இங்கே வசிக்க விடவில்லையே' என்று அவர் கூறி இரங்கினார். வேறு வழியின்றி அவர் அங்கிருந்து அபூபக்கர் என்ற தோழருடன் மதினா நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். குறைவியர் அனுப்பிய கொலைஞர்களும், அவரைத் தேடித் தொடர்ந்து சென்றனர். 104 புத்த ஞாயிறு