பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதினாவில் அவருக்கு மக்களின் ஆதரவு கிடைத்தது. அங்கே சென்றதும்,அவர் தொழுகைக்காக ஒரு கட்டடம் கட்ட ஏற்பாடு செய்தார். அவருடைய ஒட்டகம் முதலில் எந்த இடத்தில் நின்றதோ, அங்கேயே அக்கட்டடம் அமைக்கப்பெற்றது. வணக்கத்தலம் என்றால் வானளாவிய ஸ்துாபிகளும், சலவைக்கல்லால் அமைந்த படிகளுமுள்ள பெரிய மசூதியென்று எண்ண வேண்டாம். இஸ்லாத்தின் ஸ்தாபகர் அமைத்த அக்கட்டிடம், சுடாத மண்செங்கலால் கட்டிய சுவர்களின் மேலே பேரீச்சு இலைகளால் அமைந்த கூரையுடனேயே விளங்கியது! அவர்கள் கற்பிக்க வந்த மார்க்கத்தைப் போலவே அக்கட்டடமும் ஆடம்பரம் ஒன்றுமின்றி வெகு சாதாரணமாகவே இருந்தது. அந்தப் பள்ளியிலேயே அவர் ஐந்துவேளைத் தொழுகையை நடத்தியதோடு, அங்கேயே மக்களுக்கு உபதேசமும் செய்துவந்தார். பள்ளியை ஒட்டியிருந்த இரு அறைகளிலேயே அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஒவ்வோர் அறையும் 10 முழ நீளம், 6 முழ அகலம் இருந்ததென்றும், கையை உயரே நீட்டி னால் கூரையைத் தொடலாமென்றும் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. மக்காவிலிருந்து நபிபெருமான் மதினாவுக்குச் சென்றதை 'ஹிஜரத் (நாட்டை விட்டுச் செல்லுதல்) என்பர். இந்த ஹிஜரத் கழ்ந்த மாதத்திலிருந்தே இஸ்லாமிய சகாப்தமான ஹிஜிரி ஆரம்பமாகிறது. மக்காவிலிருந்து வேறு பல முஸ்லிம்களும் மதினாவுக்குச் சென்றிருந்தனர். முஸ்லிம்களுக்கு மக்கா ஒரு சோதனைத் தலமாக இருந்தது. எதிரிகளின் இடையூறுகளை ஏற்று, இஸ்லாத்துக்காக எதையும் தியாகஞ் செய்து, இன்னல்களை இன்பமெனக்கொண்டு, அவர்கள் சோதனையில் வெற்றி பெற்று விளங்கினார்கள். எனவே மதினத்து மக்கள் அவர்களையும் அவர்களுடைய நபியையும் இரு கரங்களாலும் வரவேற்றுத் தாங்களும் அவர்களுடைய சமயத்தைத் தழுவினார்கள். நாளுக்குநாள் அங்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வந்தது. - மக்காவிலிருந்த குறைவதிகள் நாயகத்தையும், முஸ்லிம்களையும் மறக்காமல் துவேஷித்து வந்தனர். மதினா மீது படையெடுக்கவும் ஏற்பாடு செய்து கொண்டு, புறப்பட்டனர். 1,000 குறைவி வீரர்களும், நாயகத்தின் தலைமையிலுள்ள சுமார் 300 மதினத்து வீரர்களுக்கும் பதர் என்ற இடத்தில் போர் நடந்தது. நாயகமே வெற்றி பெற்றார். பின்னர் யூதர்கள், சில அரபிக் கூட்டத்தார்களையும், குறைவியரையும் சேர்த்துக் கொண்டு, 24,000 படையினருடன் மதினாவை முற்றுகையிட்டனர். முகம்மதுநபி முன்னதாகவே அவர்கள் வருகையை எதிர்பார்த்து, நகருக்கு வெளியே பெரிய அகழ் வெட்டிப் போருக்கு ஆயத்தமாயிருந்தார். சுமார்

  • திருநபி சரித்திரம்.

ப. ராமஸ்வாமி ம 1 Ο Ε