பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்க்க முடியாது. அவனுடைய அரசியல், பொருளாதார விஷயங்கள் எவையும் சமய அடிப்படையிலேயே அமைந்திருக்க வேண்டும். ஆன்மீக வாழ்வுக்கு மட்டும் இறைவனை வைத்துக்கொண்டு, உலகச் சார்பான விஷயங்களில் அவனையும், அவனால் விதிக்கப்பெற்ற ஒழுக்க முறையையும் ஒதுக்கிவிட இஸ்லாம் இடங்கொடுக்கவில்லை. உலக வாழ்வுக்கு அவசியமான செயல்களிலும், இவை பாவமானவை. (ஹராம்) இவை புனிதமானவை (ஹலால்) என்று இஸ்லாமிய விதிகள் கூறுகின்றன. எனவே, அருளாளனும், அன்புடையோனும், எல்லாப் புகழும், எல்லா வல்லமையுமுள்ள அல்லாவின் பிரியத்தை நாடியே முஸ்லிம்கள் தங்கள் வாழ்வு முழுவதையும் அமைத்துக் கொள்ள வேண்டும். இக்காரணம் பற்றியே நபிகள் நாயகமும், அரபி மக்களின் அரசியல், சமுதாய வாழ்வு முதலிய எல்லாத் துறையிலும் தலையிட்டுப் பரிசீலனை செய்து அவைகளைத் தமது மார்க்கத்திற்கு ஏற்ற முறையில் அமைத்து வைத்தார். இதனாலேயே இஸ்லாமிய சரிதையில் அரசர்களே சமயத் தலைவரான 'கலிபா ஆகவும் இருந்து வந்தனர். நாயகம் நபிப்பட்டம் பெற்ற பிறகு 13வருடம் மக்காவிலும், 10 வருடம் மதினாவிலும் தங்கியிருந்தார். ஹிஜிரி 11-வது ஆண்டில் - கி.பி.632 ரபீயுல் அவ்வல்மீ, 12வ திங்கட்கிழமை, அவர் தமது 63-வது வயதில் பூதவுடலை நீத்தார்." அஞ்ஞான இருளிலும், அநாகரிக நிலையிலும் இருந்த அரேபிய நாட்டில் முகம்மது நபி ஞானச்சுடராக விளங்கினார் என்றே அவரைப் பற்றிய வரலாறுகள் விவரிக்கின்றனர். இனி, அவர் வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதைக் கவனிப்போம். ஆண்டவனிடத்தில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டிருந்தார். இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்ற வாக்கியம் அவருக்கு முற்றிலும் பொருந்தும். அவர் மக்காவிலிருந்து மதின்ாவுக்குச் செல்லும்போது வழியில் 'தெளர் என்ற குகையில் தங்கியிருந்தார். அவருடன் அபூபக்கர் என்ற தோழரும் இருந்தார். அவர்களைப் பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கான கொலைஞர்கள் பின் தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தனர். குகைக்கு வெளியே காலோசைகள் கேட்டன. அபூபக்கர், 'நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம். அவர்கள் நிச்சயமாக நம்மைக் கொன்று விடுவார்கள்!' என்று கூறினார். அப்போது நாயகம், அவர்கள் இருவரைத் தவிர மூன்றாவது நபர் ஒருவரும்கூட இருந்ததை அவருக்கு ஞாபகப்படுத்தி, 'பயப்பட வேண்டாம்! நம்முடன் ஆண்டவனும் இருக்கிறானன்றோ!' என்று கூறினார். அவனன்றி ஒரணுவும் அசைவதில்லையென்ற இந்த நம்பிக்கை உருவாக அவர் விளங்கினார்.

  • நாயகம் பிறந்ததும் இதே மீ. இதே தேதி, இதே நாளில்,

ப. ராமஸ்வாமி ே 1 Ο 7