பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பெருமானின் குண ஒழுக்கம் திருக்குர் ஆனாயிருந்தது என்று அவருடன் மிகவும் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த மனைவியரான ஆயிஷா நாயகியார் கூறியிருக்கிறார். நபியின் ஒழுக்கம் குர்ஆனா யிருந்தது, குர்ஆனின் விமரிசனம் நபியின் வாழ்க்கையாயிருந்தது என்பதைப் பார்க்கினும் சிறப்புரை வேறு இருக்க முடியாது. எளிய வாழ்க்கை, ஓயாத உழைப்பு, எதையும் தாமே செய்தல், மெளனம், தியானம், உள்ளத் துய்மை, அன்பு, அடக்கம், நிதானம், முக மலர்ச்சி, சுயநலமறுப்பு, வீரம், பொறை முதலிய குணங்கள் அவருடைய அணிகலன்களாக விளங்கின. சிறுவயதில் அவர் கடைக்குப் போகும்போது, ஏழைகளின் வீடுகளுக்குப் போய் அவர்களுக்கு ஏதேனும் வாங்கிவர வேண்டுமா என்று கேட்பாராம். முதுமையில் தாம் வாங்கிய சட்டையைக்கூட மற்றொரு நண்பர் தூக்கி வரச் சம்மதிக்கவில்லை. 'நானும் ஒர் அடிமை;அடிமை போல உண்கிறேன். அடிமை போலவே அமர்கிறேன் என்று அவர் சொல்லுவார். வீட்டைப் பெருக்குவது முதல் பால் கறத்தல், ஒட்டகத்தைப் பேணுதல், கிழிந்த உடைகளைத் தைத்தல், செருப்பைச் செப்பனிடுதல் முதலிய எந்த வேலையையும் அவர் இழிவாய்க் கருதியதில்லை. மதினாவில் அவர் வீட்டில் ஒரு நார்கட்டில், ஒரு தலையனை (உள்ளே ஈச்ச இலைகளுள்ளது), தோல் விரிப்பு, தண்ணிர் வைக்கும் தோல் கூசாக்கள் ஆகியவைகளே இருந்தன. ஒரு சமயம் அவற்றைக் கண்ட ஹஸ்ரத் உமர் கண்ணிர்விட்டு அழுதார். ரோமாபுரிச் சக்கரவர்த்தியும், பாரசீகச் சக்கரவர்த்தியும் ஆடம்பரமான இன்ப வாழ்க்கையில் ஆழ்ந்திருக்கும் போது, ஆண்டவனுடைய துதர் அவ்வாறு வறுமையில் வாழலாமா என்று அவர் கேட்டார். அதற்கு மும்மது, அவர்கள் இந்த உலகை அடையவும், நான் மறுமையை (பேரின்பத்தை) அடையவும் உங்களுக்குப் பிரியமில்லையா? என்று பதில் கேள்வி கேட்டார். அவர் தாம் உபதேசித்த படியே, தான தருமங்கள் செய்து வந்தார். ஒருசமயம் அவர் மேலாடை இல்லாதிருந்ததால், ஒரு பெண்மணி ஒர் ஆடையைக் கொண்டுவந்து கொடுத்தாள். சிறிது நேரத்திற்குள் அந்த ஆடை அங்கு வந்த வேறொருவர் கைக்குப் போய்விட்டது. நாயகம் கேட்டதை மறுப்பதில்லை யென்று தெரிந்திருந்தும், அவருடைய ஒற்றை மேலாடையையும் அவ்வாறு வாங்கிக் கொள்ளலாமா என்று ஆடை வாங்கியவரை நண்பர்கள் கடிந்து கொண்டார்கள். நாயகத்தைப் பார்க்கினும் அந்த ஆடை அவருக்கு அவசியமாயிருந்தது. தாம் இறந்த பிறகு தம் உடலைப் பெருமானுடைய ஆடையில் பொதித்து அடக்கம் செய்ய வேண்டுமென்று அவர் விரும்பியிருந்தார். குழந்தைகளிடத்தில் நாயகத்திற்குப் பிரியம் அதிகம். அவர்களைக் கையிலெடுத்து முத்தமிட்டு விளையாடுவார். அநாதைக் குழந்தைகளிடம் 108 ம புத்த ஞாயிறு