பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பவனைப் போலவும், ஆற்றைக் கடக்க விரும்பும் ஒருவ அக்கரையைத் தன்னிடம் வருமாறு அழைப்பது போலவும் அ. விளங்குகிறார்!’ என்பது அண்ணலின் வாக்கு. வாழ்க்கையையும் ஆராய்ச்சி முறையையும் கொண்டு பரிசீல.ை செய்தே எதையும் ஏற்றுக்கொள்ளும்படி அவர் சீடர்களுக்கு அடிக்கடி சொல்லி வந்தார். எவ்வளவு பெரியவர் எது சொன்னாலும், அவ பெருமைக்காக அதை ஏற்றுக்கொள்வது முறையன்று என்று வற்புறுத்து. வந்தார். குருட்டு நம்பிக்கையும் அறியாமையேயாம். அறியாமை இருளை அகற்ற வந்த புத்தர், ஒவ்வொருவரும் தமது அகத்தில் ஞான விளக்கேற்றி இருளைக் கடியும்படியும் வேண்டினார். வேதாந்தம் பற்றி விரிவுரை கூறுவோர் மந்திக்குருளையையும் பூனைக்குட்டியையும் உபமானமாகக் கூறுவார். குரங்கு தன் குட்டியைப் பற்றிய நினைவேயில்லாமல் மரத்திற்கு மரம் தாவும். ஆனால் அதன் குட்டி, தாயின் வயிற்றை இறுகப் பற்றிக்கொண்டு ஒட்டிக்கொள்ளும். பூனைக்குட்டியோ, தாயோடு ஒட்டிக்கொள்ள ஒரு முயற்சியும் செய்யாது. பூனைதான் அதை வாயிற் கெளவிக் கொண்டே இடத்தோறும் சுற்றித் திரியும். இறையருளாலேயே ஜீவன் மீட்சி பெறுதல் பூனைக்குருளைக்கு ஒப்பாகும். புத்தரின் உபதேசத்தின்படி, மந்திக்குருளைபோல், மனிதனே முயற்சி செய்ய வேண்டும். தன் வினையின் பயனை ஒவ்வொருவனும் தானே அநுபவித்தாக வேண்டும்! 'சம்சாரத்தில் ஆழ்ந்துள்ளவனின் உள்ளம் முதலைத் தோலால் மூடப்பட்டது; வெட்டினாலும் கத்தி இறங்காது' என்பது இராமகிருஷ்ணர் திருவாக்கு. செல்வத்துக் களித்தலும். தரித்திரத்து அழுங்குதலும், எதனிலும் முடிவில் துக்க ம ை தலுமான உலக வாழ்க்கையின் உண்மையை ப - ன் உன்ாம் உணர வேண்டும். இல்லாவிடின், பட்டினத்தார் கூறுவது போல், விழலுக்கு முத்துலை யிட்டு _ இறைத்துக் கொண்டேயிருப்பான். உண்மையை உணர்ந்து விட்டால், கடைத்தேற வழி தேடுவான்; உணர்ச்சிகளையொடுக்கி ஒழுக்கத்தைப் பேணுவான். உணர்ச்சிக ளொடுங்கியதும், அவன் விடுதலை பெறுவான். உணர்ச்சிகளின் வயப்பட்டு உழல்வோன் வாழ்க்கைக் கடலில் ஆழ்ந்து தத்தளிக்கிறான். அறமொன்றே அவனை கரையேற்றும் நாவாய். சுயநலம்-தானென்னும் ஆணவம் அற்றதும், மனமாசுகள் நீங்க ஆரம்பிக்கும்; அருள்அரும்பி மலரும்; தருமம் காய்த்துக் கனியாகும். + தேவிஜ்ஜ சுத்தம். ** முத்துலை - மூன்று துலா ப. ராம ஸ்வாமி ே 11