பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசியும் அறியாமையும் சாக்கியமுனி அருளிய இத்தகைய அருளறத்தை மக்கள் நன்கு தெரிந்து கடைப்பிடித்தால் இன்று உலகில் நாம் காணும் கோரக் காட்சிகள் பலவும் ஒரு கணமேனும் நிலைத்திருக்க முடியாது. எங்கு பார்த்தாலும் வறுமையும் பசியும் கோடிக்கணக்கான மக்களை வாட்டி வருத்துகின்றன. இன்று பல்லோர் உழைப்பினால் சிலர் மட்டும் பிரபுக்களாய்ப் பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத் தங்கள் துருத்திக்(கு) அறுசுவை போடுகின்றார்' மலை போன்ற செல்வமுடையோர் பலர் காயா மரங்களாகவும், கனிவில்லாத கற்பசுக்களாகவும் விளங்குகின்றனர். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஏழை மக்களின் கண்ணிர் அருவியாய், ஆறாய்ப் பெருகிக்கொண்டேயிருக்கிறது. பெரும்பாலான மக்களின் பட்டினி, பரிதவிப்பு, நோய் நோக்காடுகளெல்லாம் மற்றையோர் கண்களிலே படாமலில்லை. ஆனால், மேலே வானம், கீழே பூமி இருப்பதுபோல், இவையெல்லாம் இயற்கையென்றே எண்ணி அவர்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறார்கள்! உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரை எத்தனை சமயங்கள் தோன்றியிருக்கின்றன. எத்தனை ஆசாரியர்களும், ஆசிரியர்களும்! ஆனால், இன்றுவரை மானிடரின் பசிப்பிணிகூட நீங்காமல் நிலைத்து நிற்கிறது. பசியால் வாடும் மக்களுக்குப் பரலோகத் திறவுகோல் அளிக்கப்படுகிறது! 'மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று மணிமேகலை கூறுகிறது. மேலும், 'பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக!' என்று உலக வாழ்த்தும் அந்த நூலிலேதான் ஒலிக்கிறது. கானார். கேளார், கான்முடப்பட்டோர், பேணுநர் இல்லோர், பிணி நடுக்குற்றோர் யாவரும் வருக! என்று அழைத்து மணிமேகலை உணவூட்டுகிறாள். பின்னால், சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்க வேண்டுமென்று அவள் சோழ அரசனிடம் கேட்க, அவ்வாறே மாற்றப்படுகிறது. 'நிறையக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம். அறவோர் பள்ளியும், அட்டிற் சாலையும், அருந்துனர் சாலையுமாக மாறுகிறது! நரகச் சிறை போல் 12 0 புத்த ஞாயிறு