பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிப்பதில் பிற்காலத்தில் ஏற்பட்ட இந்த நான்கு தெளிவான பிரிவுகள் புத்தர்காலத்தில் இல்லை யென்பதே. - முக்கியமாக வைதிக சமயம் ஒன்றே பெரும்பாலும் நாட்டில் பரவியிருந்தது. அச்சமயத்திற்கு அடிப்படையாக விளங்கிய வேதங்கள் நான்கும் மற்ற அற நூல்களும் எல்லா வகுப்பார்க்கும் பொதுவில் போதிக்கப்படவில்லை. அவற்றின் உட்பொருள்கள் மறக்கப் பெற்று, சோமபானமும், ஊன் உணவும், ஊனுடை வேள்விகளுமே பெரிதும் ஒம்பப் பெற்று வந்தன. மற்றும் சமுதாய வாழ்வில், மக்கள் நான்கு முக்கிய சாதிகளாகவும், அப்பாலும் பல பிரிவுகளாகவும் பிரிந்து, தமக்குள் நெருங்கிய தொடர்பும் நேசப்பான்மையும் வளர வகையில்லாத முறையில் பிளவுபட்டிருந்தனர். பிராமணர் சாதியினர் சமுதாயத்தில் முதலிடம் பெற்று, மன்னர்களுக்கு ஆலோசனை கூறவும், அவர்கள் மூலம் பெரிய யாகங்கள் செய்யவும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். பிராமணரே உயர்ந்தவரென்ற கொள்கை நிலவி யிருந்தது. அவர்களே சமய வழிகாட்டிகளாகவும், சமய நூல்களின் பாதுகாவலர்களாகவும் விளங்கினர். மற்றும் பெரும்பாலான பொது மக்கள் கல்வி மணமின்றி, இன்று போல், அன்றும் பாமரராகவே இருந்தனரென்று கொள்ளலாம். அக்காலத்தில் பெரும்பாலான மக்கள் ஊனணுவு உண்போராகவே யிருந்தனர். வேதியரும், மேல்நிலையிலிருந்த மற்ற வகுப்பினரும் புலால் உண்பவரே. வேள்விகளில் பசுக்கள், மாடுகள், குதிரைகள், ஆடுகள் முதலியவை தேவர்களுக்குப் பலியாக அளிக்கப்பட்டன. 'அக்காலத்தில் கடவுள் பெயரால், சமயத்தின் பெயரால், வேள்வியின் பெயரால், உயிர்க்கொலைகள் நிகழ்த்தப்பட்டன: குடி பெருகலாயிற்று: மக்களுக்குள் பிறப்பால் உயர்வு தாழ்வு வகுக்கப்பட்டன. கொலையுங் குடியுஞ் சாதிக் கொடுமையும் யாண்டுங் கடவுள் நெறியாகக் கருதப்பட்டன என்று சுருங்கச் சொல்லலாம்." பெளத்த தருமம் நாட்டில் கண்ட கொடுமைகளை ஒழிக்கப் போதி மாதவர் முனைந்து நின்றார். சமயங்களின் பெயரால் கோபதாபத்துடன் விவாதித்துக் கலகம் செய்வதை அவர் அறவே வெறுத்தார். நூல்களைப் புரட்டிக்கொண்டு, எட்டுப் புழுக்களாய், வாழ்க்கை முழுதையும் தத்துவ ஆராய்ச்சியில் வறிதே கழிப்பதையும் அவர் கண்டித்தார். ஆண்டவன் பெயராலும், மற்றைத் தேவர்கள் பெயராலும், ஆயிரக்கணக்கான வாயில்லாப் A. 'தமிழ் நூல்களில் பெளத்தம்' - திரு. வி. கலியாணசுந்தரர். புத்த ஞாயிறு