பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்திருக்கிறார். பிராமணர்கள் ஊனும் உடைகளும் அளித்துப் பிக்குகளுக்கு உபகாரம் செய்து வந்ததையும் அவர் போற்றியிருக்கிறார். ஆயிரக்கணக்கான பிராமணர் அவருடைய தருமத்தை ஏற்றுக்கொண்டு பிக்குகளாயினர். அவருடைய முதன்மையான சீடர்களில் இருவராகிய சாரீபுத்திரரும், மெளத்கல்யாயனரும் பிராமணர். உருவேலா வனத்திலிருந்த பிராமண முனிவரான மகாகாசியபர் தம்முடைய சீடர்கள் ஐஞ்ஞாற்றுவரோடு ததாகதரைச் சரணமாகக் கொண்டார். பிராமணரைப் போலவே கூடித்திரியர்களிலும் பலர் பெளத்த தருமத்தை மேற்கொண்டனர். பல இளவரசர்கள், மஞ்சள் உடையணிந்து, மாதவரின் அடியார்களாக விளங்கினர். அரசர் பலர்தம் அரியாசனங்களை விட்டிறங்கி, ஆதி மூர்த்தியின் அடிகளைப் பணிந்து, அறங்கேட்டு உய்ந்தனர். மகத நாட்டரசர் பிம்பிசாரரும், கோசல நாட்டரசர் பிரசேனஜித் என்ற பசேனதியும் அவருக்கு அடியராகி, அருளறம் வளர்வதற்கு அருந்தொண்டாற்றி வந்தனர். அவர்களுடைய பிராமண மந்திரிகளும் அவரையே தம் குருமனியாக ஏற்றுக்கொண்டனர். அந்தனர், அரசர், போர் வீரர்களைப் போலவே, மற்றும் பல சாதியினரையும் புண்ணியமூர்த்தி தமது தருமத்தில் சேர்த்துக்கொண்டு வந்தார். சாதியும், நிறமும், தொழிலும், தோற்றமும் பெளத்த மார்க்கத்தை மேற்கொள்ளவும், பிக்கு சங்கத்தில் சேரவும் தடையாக இருக்கவில்லை. எக்குலத்தோராயினும், மக்கள் அனைவரையும் அத்தருமம் இருகையாலும் வரவேற்று அனைத்துக்கொண்டது. தெருக் கூட்டுவோரும், மீன் பிடிப்போரும், வேடர்களும், சமுதாயத்தின் அடித்தலத்தில் ஒடுங்கிக் கிடந்த மற்றோரும் புத்த தருமத்தைப் புகலிடமாய்க் கொள்ள வழி திறந்து வைக்கப் பெற்றது. குப்பையள்ளும் கநீதனைத் ததாகதர் தாமே சங்கத்தில் சேர்த்துக் கொண்டார். இவனே பின்னால் பெரிய முனிவனாக விளங்கினான். கொள்ளைக்கும், கொலைக்கும் கூசாமல், காடும் நாடும் அதிரும்படி கலங்கி வந்த திருடர் தலைவனான அங்குலிமாலனை" அவர் அன்போடு அரவணைத்துக் கொண்ட பெருமை பொன்னெழுத்தில் பொறிக்கத்தக்க நிகழ்ச்சியாகும். குருநாதரின் கருணை வெள்ளத்தில் ஆழ்ந்த அங்குலிமாலன் வெளியே மீளவில்லை. அதனுடன் கலந்து விட்டான். மற்றும் புத்தருடைய அந்தரங்கச் சீடர் பதின்மரில் ஒருவராகிய உபாலி நாவிதர்' என்ற மருத்துவ குலத்தைச் சேர்ந்தவர். இவர் சங்கத்தில் உறுப்பினரா யிருந்ததோடு, பிக்குகளின் ஒழுக்க முறையையும் கவனிக்கும் சங்கத் தலைவராகவும் திகழ்ந்து வந்தார்.

  • இவனது பெயர் அங்குலிமாரகன்' என்றும் காணப்படுகிறது.

ப. ராமஸ்வாமி ே 1 도