பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திற்குமே பொதுவான பெருஞ் சோதியாகும் என்பது உலகம் புகழும் இந்தியப் பிரதமமந்திரி திரு. பண்டித ஜவாஹர்லால் நேருவின் புகழ்மாலை. தத்துவ சாத்திரப் பேராசிரியர் பாரத ரத்னம் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் கூறியுள்ள அரிய வாக்கியங்கள் இவை: 'புத்தர் தம் உபதேசங்களை உலகின் மனச் சான்றிலே பதித்துவிட்டுப் போயிருக்கிறார். உலகனைத்திலுமுள்ள தத்துவ ஞானிகளும், புத்தருடைய அழைப்புக்கு இன்று செவி சாய்த்து வருகின்றனர். 'புத்தர் போதித்த தத்துவங்களான அன்பும் உண்மையும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், உலகம் முழுவதும் சமாதானத்தோடும் சாந்தியோடும் வாழ முடியும்...' 'ஒரு சமயம் புத்தர் தலையை மழிப்பதற்குப் பதிலாக உங்கள் பாவங்களை மழித்துத் தள்ளுங்கள்!' என்று கூறினார். 'அரசுகளும் மக்களும் இந்த உபதேசங்களைப் பின்பற்றி, ஞானத்தையும் கருணையையும் தமக்கு வழிகாட்டுந் துணையாக ஏற்றுக்கொண்டால், நம் உலகம் சீர்திருத்தி வசிப்பதற்கு ஏற்றதாகும்...' சுவாமி விவேகாநந்தர் அமெரிக்காவில் நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில் புத்தரைப் பற்றியும், அவர் அறத்தைப் பற்றியும் விளக்கியுள்ளார். அதில் ஒரு பகுதி கெளதமரை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போலுளது: அவர் (புத்தர்) தம்மைப்பற்றிச் சொல்லிக்கொண்டது.இதுதான்: ஆகாயத்தைப்போல் எல்லையற்ற பேரறிவுக்குப் புத்தர் என்று பெயர் கெளதமராகிய நான் அந்த நிலையை அடைந்துள்ளேன். நீங்கள் அனைவரும் அதற்காக முயற்சி செய்தால் அதை அடைய முடியும். அவர் சுவர்க்கமடைய விரும்பவில்லை. பணத்தை வேண்டவில்லை; தமது சிம்மாசனத்தையும் மற்றைப் பொருள்களனைத்தையும் துறந்து, இந்திய நாட்டின் தெருக்களில் அலைந்து தம் உணவுக்காகப் பிச்சையெடுத்துக் கொண்டு, கடல் போன்ற விசாலமான இதயத்துடன், மக்கள், விலங்குகளின் நன்மைக்காக உபதேசம் செய்து வந்தார். ஒரு யாகத்தைத் தடுத்து, விலங்குகளுக்கு தமது உயிரையே அளிக்கத்தயாராயிருந்த மனிதர் அவர் ஒருவரே. இத்தனைக்கும் அவருக்குத்துாண்டுகோலாக உந்தக்கூடிய எவ்வித ஆசையுமில்லை. ஒரு சமயம் ஒரு மன்னனிடம், 'ஆட்டுக்குட்டி யொன்றைப் பலி கொடுப்பது நீ சுவர்க்கமடைய உதவுமென்றால், ஒரு மனிதனையே பலி கொடுப்பது அதைவிடஅதிக உதவியாகும்; ஆதலால் என்னையே பலியிடு என்று கூறினார். மன்னன் திடுக்கிட்டுப் போனான்! எனினும், இந்த மனிதருக்கு ஆசையெதுவும் இருந்ததில்லை. ஊக்கமாகக் கருமத்தைச் செய்துகொண்டே பரிபூரணமடைந்த மனிதர் அவர். அவர் 22 0 புத்த ஞாயிறு