பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரிசையாகப் பதித்த முத்துக்களைப் போன்ற பற்கள், பவளவாய், தண்ணொளி பரப்பும் சந்திரவதனம் ஆகிய இத்தனை உறுப்பு நலன்களும் வாய்ந்த புத்தரை வருணிக்கும்போதெல்லாம், பண்டைப் புலவர்களுக்கு ஆண் யானையும், சீரிய சிங்கமும், காற்றாய்ப் பறந்தோடும் கறுப்பு மானுமே நினைவுக்கு வந்திருக்கின்றன. சிங்கம் போன்ற எடுப்பான நெஞ்சும், முதுகோடு ஒட்டிய வயிறும், உடலின் கம்பீரத் தோற்றமும் அவர் அசைந்தசைந்து நடந்துசென்றது. நாகத்தின் நடையழகையே நினைவுறுத்தும். ஆனால், சிங்கம் போன்ற மிடுக்கான கம்பீரத் தோற்றத்துடன், அவர் அன்னம் போன்ற அமைதியையும் பெற்றிருந்தார். எல்லா இனிமைகளும் ஒருங்கே பொருந்தியிருந்ததுடன், அவர் குரலும் இசைக்குரலாக இருந்தது. எந்த இடத்தில், அவர் குரலைப் பற்றிக் குறிக்க நேர்ந்தாலும். அது கருவிக'ப்' பறவையின் இசைபோலிருந்த தாகவே குறிக்கப் பெற்றுள்ள்து. புத்தர் பெருமானின் பொன்மொழிகள் லட்சக்கணக்கான மக்களைக் கவர்ச்சி செய்ததற்கு, அம்மொழிகளின் உயர்வோடு, அவர் தோற்றத்தின் இனிமையும், குரலின் இசையும் காரணங்களாயிருந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகில் வழங்கிவரும் ஆடல்கள், பாடல்கள், நூல்களிலும், சிற்பிகளும் சைத்திரிகர்களும் தங்கள் உளியாலும், துரிகையாலும் சமைத்து வைத்துள்ள சிலைகள், சித்திரங்களிலும் நாம் கருணைமூர்த்தியான புத்தரை ஒரேபடியாய்த்தான் காண்கிறோம். ஆழ்ந்த அறிவும், குளிர்ந்த அன்பும் தவழும் ஒளி பொருந்திய முகத்துடன், அசைதலும் துளங்குதலுமின்றி அமைதியோடு ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருப்பதுபோன்ற உருவமே நம் கண் முன்பு வருகிறது. கம்பீரத் தோற்றம், சாந்தி நிறைந்த தண்மதி போன்ற திருமுகம், கருணைபொழியும் கண்கள், இத்தனையுடன் கையிலே திருவோடு ஏந்திய உருவம் எப்போது தங்களிடம் வரப்போகிறது என்று அங்கநாடு, கோசலம், மகதம், குருநாடு, மிதிலை, காசி முதலிய இடங்களில் வசித்த பண்டை மக்கள் ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருந்தனர் என்றால், அதற்கேற்ற எழிலும் அழகும் புத்தரிடம் இருந்திருக்க வேண்டும். கருங்கல்லிலும், சலவைக் கல்லிலும், வெண்கலத்திலும் அமைந்த பல்வேறு புத்தர் சிலைகளைப் பண்டித நேரு பார்த்துப் பார்த்து வியந்திருக்கிறார். 'உலகச் சந்தடிகளுக்கு அப்பால், உணர்ச்சிகளும் ஆசைகளும் ஒடுங்கிப் பரமோன நிலையில் அமர்ந்துள்ள புத்தரின் ஒவியத்தைக் காணும்போது, நாம் அண்டமுடியாத, அடையமுடியாத தொலை தூரத்தில் அவர் இருப்பதாகத் தோன்றுகிறது' என்று அவர் கூறுகிறார். ஆனால், உடனேயே அவருக்கு வேறொரு கருத்தும்

  • இமயலைச்சாரலிலுள்ள ஒருவகைப் பறவை அதன் குரல்

இசைமயமானது. 24 புத்த ஞாயிறு