பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன்றுகிறது: "அவருடைய கண்கள் மூடி யிருக்கின்றன. ஆயினும் அவைகளிலிருந்து ஒர் உயிர்ச்சக்தி எட்டிப் பார்க்ன்ெறது. அவர் உடல் முழுதும் மூலாதாரமான ஜீவசக்தி நிறைந்து விளங்குகின்றது. ஆண்டுகள் பல்லாயிரம் கழிந்து கொண்டேயிருக்கின்றன. ஆயினும், க. ையொகப் புத்தர் நமக்கு வெகுதூரத்திலில்லையென்று தோன்றுகிறது. அவருடைய குரல் நம் செவிகளில் மெல்ல ஒலிக்கிறது. வாழ்க்கைப் போரிலே நாம் புறங்கொடுத்து ஓடாமல் நிலைத்து நின்று, மேற்கொண்டு வளர்ர் விக்கும் முன்னேற்றத்திற்கும் உரிய வாய்ப்புக்களை அவ் வாழ்க்கையிலேயே கண்டுகொள்ளும்படி அவர் குரல் நமக்குப் போதிக்கின்றது என்றும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். மனித சமூகத்தின் சிந்தனைக் களஞ்சியத்திலே நிலையாக இடம் பெற்றுள்ளவர் புத்தர். அவரை இன்று நினைப்பினும், நம் சிந்தையில் எழுச்சியுண்டாகிறது, உணர்ச்சிகள் கொந்தளித்துப் பாய்கின்றன. அன்பும், அருளும், உண்மையும், ஒழுக்கமும் வாழ்வின் அடிப்ப.ை யென்று அவர் போதித்த தத்துவங்கள் ஏட்டுச் சுரைக்காய்களாக இல்லாமல் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. மறக்கவொண்ணாத, மாசற்ற அந்த மகான் ஒர் அரிய மனிதராகவே திகழ்ந்திருக்க வேண்டும். மானிட சமுதாயம் என்னும் சிப்பியிலே விளைந்த விலை மதிக்க வொண்ணாத தன்முத்தே போதிவேந்தர்! 'வெண்திரையின் மீது விரிகதிர்கள் நான, எரிதழல் கொள் மேனி' என்று ஒரு பழந்தமிழ்ப்பாடல் அவர் திருமேனி எழிலைக் குறிக்கின்றது. கவிமணியவர்களின் ஆசிய ஜோதி யிலுள்ள ஒரு கவியையும் பார்ப்போம்: 'மரத்தினடியில் மெளனமெய்தி, சோதி மண்டலம் சூழ்ந்த பொலிய முழங்கை மடக்கி முட்டில் அமர்த்தி, வனத்தில் வாழும் மாபெருந் தெய்வம் அருள் வடிவாகி அமர்வது பாராய்! சாந்தம் உருவாய்த் தழைப்பது காணாய்! விரிதா மரையை வென்ற விழிகளில் தெய்வத் தன்மை திகழ்வது நோக்காய்!' காவியுடை அணிந்து முண்டிதமாக அலைந்து கொண்டிருந்த பெருமானைக் காண்கையில், 'கள்ளரும் உள்ளம் மறந்து நின்றார். என்றும், கண்டவர் 'உள்ளங் கனியு தென்றார் என்றும், வந்தவர் போனவர் கண்களுக்கும் அந்த வள்ளல் முகம் விருந்தானது ' என்றும் நாஞ்சில் கவிஞர் வருணித்துள்ளார். ஆசைத் துடிப்புகள் அணுவளவுமின்றி, ஒளியும் சாந்தியும் ஒருருவாய் அமைந்து, பிக்குகளோடு பிக்குவாய்ப் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நடந்த ப. ராமஸ்வாமி ம : Ե