பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெளதமரைக் கற்பனைக் கண்ணால் கண்டு, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய ஆசிரியர் ஹெர்மான் ஹெஸ் தமது நவீனம் ஒன்றில் பின்வருமாறு விவரித்துள்ளார்: 'சாந்தமான அவர் முகத் தோற்றத்தில் களிப்புமில்லை, வெளிப்படையாக அன்றி, அவர் தமக்குள்ளே மெல்ல முறுவல் செய்வதுபோல் காணப்பட்டார். கட்டிளங் குழந்தையைப் போல் அடக்கமான புன்னகை பூத்துச் சாந்திதவழஅவர் நடந்து சென்றார். உடலில் தமதுநீண்ட அங்கியை அணிந்துகொண்டு, மற்றத் துறவிகளைப் போலவே அவரும் வழிநடந்தார். ஆனால் அவருடைய திருமுகமும், சிறுநடையும், சாந்தி நிறைந்த தணிந்த பார்வையும், அமைதியாகத் தொங்கிக் கொண்டிருந்ததாழ்ந்த கைகளும், அக்கைகளிலுள்ள ஒவ்வொரு விரலும், அவர் நிறைவெய்திய பூரணர் என்பதை வெளிப்படுத்தின; இனி அவர் எதையும் நாடவில்லை என்பதைக் காட்டின. இடையறாத சாந்தியை, வாடாத ஒளியை, அசைக்க முடியாத ஓர் அமைதியை அவை அறிவுறுத்தின. ' மன்னர்களும், மறையோர்களும், இளவரசர்களும் இளைஞர்களும் அவர் முகவிலாசம் பார்த்து, உள்ளம் பிணிக்கும் அவருடைய இன் சொற்களில் ஈடுபட்டு, அவர் திருவடிகளைத் தொடர்ந்து செல்லும்படி அவர் அவ்வளவு அழியா அழகுள்ள வடிவு பெற்றிருந்தார் என்றே சொல்ல வேண்டும். புத்தரென்று சொன்னதும், யாருக்கும் சாந்தியே நினைவுக்கு வரும். ஆயினும், அந்தச் சாந்தமூர்த்தி தமது வாழ்நாள் முழுதும் ஒய்வொழிவின்றி உழைத்து வந்தாரென்று சரித்திரம் கூறுகின்றது. அதுபோலவே, அவருடைய இனிய முகம், அடக்கமான புன்னகை முதலியவற்றைப்பற்றிப் படிக்கும்போது, மன்னுயிர்க்காக அவரடைந்த துயரத்தையும், அழுது புலம்பி அரற்றும் புவியே! மகிழ்ந்து நீயும் உன் மக்களும் வாழ, என்குடி, என்கிளை,என்.வாழ்வு. என் சுகம், என் இளம்பருவம், என் சிங் காதனம், யான்வாழ் அரண்மனை யாவும் வெறுத்தேன்' என்று வெறுத்து வெளியேறியபோது அவர் முகத்தில் தேங்கி நின்ற சோகத்தையும், உண்மையை நாடி உழலும்போது, ஊனை வெறுத்து, உடலை வருத்தி, வயிறும் முதுகும் ஒன்றாய் ஒட்டி, உயிர் ஊசலாடும்படி நோயற்ற நோன்பையும், போதிமரத்தடியில் பூரண ஞானம் பெற்ற காலையில் விளங்கிய அவர் திருமுகப் பொலிவையும் மற்றும் பற்பல காட்சிகளையும் நாம் மறந்து விடுவதற்கில்லை. 26 புத்த ஞாயிறு