பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிந்து அநுபவித்த கலைஞர்கள் தங்கள் திறமைகளையெல்லாம் புத்தருக்கே உரிமையாக்கிவிட்டார்கள்! கிறிஸ்துநாதர் பிறப்பதற்குமுன், ஆறாவது நூற்றாண்டில், இந்திய நாட்டில் புத்தர் பெருமான் துவக்கி வைத்த சமயப் புரட்சி காரணமாக, அதைத் தொடர்ந்து பலகலைகளும் அரும்பி மலர ஆரம்பித்தன. நாட்டின் பல பாகங்களில் பெளத்த விகாரைகளும், ஆராமங்களும், சேதியங்களும் அமைக்கப் பெற்றன. பார்த்தவிடமெல்லாம் புத்தருடைய சிலைகள் காட்சிய வித்தன. குன்றுகளைக் குடைந்து கோயில்கள் அமைக்கப் பெற்றன. அசோக சக்கரவர்த்தி காலத்திலும், அதற்குப்பின்னரும், பெரும்புயல் வீசுவதுபோன்ற வேகத்துடன், பெளத்த தருமம் பரவிப் பெருக ஆரம்பித்தது. இந்தியா மட்டுமல்லாமல், அக்காலத்தில் கிரேக்கர் ஆட்சியிலிருந்த சிரியா, எகிப்து, மசிடோனியா முதலிய நாடுகளிலும் இந்தியப் பிக்குகள் சென்று தருமப் பிரச்சாரம் செய்து வந்தனர். இலங்கை, பர்மா, சீனா, ஜப்பான் நாடுகளுக்கும், ஜாவா, சுமத்திரா முதலிய தீவுகளுக்கும் துறவிகள் சென்று பெளத்த மதத்தைப் பரப்பி வந்தனர். இத்துறவிகளைத் தொடர்ந்து சிற்பிகளும், சித்திரக்காரர்களும் பல நாடுகளுக்கும் போய், ஆங்காங்கே ஆலயங்களிலும் மலைக்குகை களிலும் தங்கள் கலைப் படைப்புக்களால் அவ்வறத்தை நிலைநிறுத்தி வந்தனர். இவ்வாறு ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிகா ஆகிய மூன்று கண்டங்களையும் அளாவி வளர்ந்தன. பெளத்தமும் இந்தியக் கலைகளும். ஹைதராபாத் நிஜாம் இராஜ்யத்தின் வட பகுதியில் குன்றுகளின் நடுவே ஒரு கனவாயிலுள்ள அஜந்தா குகைகள் கலை சம்பந்தமாக உலகப் புகழ் பெற்றவை. மனிதர் கைபுனைந்தியற்றிய கோயில்களில் இந்தக் குகைகளுக்கு முதலிடம் அளிக்கலாம். இவைகளினுள்ளே சுவர்களில் பல வர்ணங்களில் தீட்டப் பெற்ற புத்த சித்திரங்கள் தனியழகும் ஒளியுங்கொண்டு திகழ்கின்றன. கதைகளாயும், கவிதைகளாயும் மக்களிடையே பரவி வந்த புத்தர் வரலாறுகளும், அறக்கொள்கைகளும், அங்கே உயிரோவியங்களாக அமைக்கப் பெற்றிருக்கின்றன. புத்தர் வாழ்ந்த காலத்திற்கு ஆயிரம் வருடங்களுக்குப் பின்னால் தீட்டப் பெற்ற இச்சித்திரங்கள் போதி நாதரின் உருவமும் உபதேசங்களும் மக்கள் மனத்திலே பகமரத்தானிபோல் பதியும்படி செய்தன. குன்றுகள் சூழ்ந்த அடவியிலே, கூட்டம் கூட்டமாய்க் குரங்குகள் கூத்தாடித் திரியும் ஒரு கணவாயிலே, இந்த அமர ஒவியங்கள் இன்றும் மக்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் பெருவிருநீதாக அமைந்திருக்கின்றன. "அருமையான வாழ்வு அமைந்துள்ள போதே அஜந்தாவை வந்து பாருங்கள்!' என்று இந்நாட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்து வரும் யாத்திரிகர்களை இவை அழைத்துக் கொண்டேயிருக்கின்றன. அஜந்தாவுக்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்றவை நிஜாம் இராஜ்யத்திலுள்ள எல்லோரா குகைகள். பல 28 ைபுத்த ஞாயிறு