பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கையைப் போலவே பர்மாவிலும் பெளத்தம் நிலை பெற்றது. இந்திய பிக்குகள் அங்கேயும் சென்று போதிமாதவரின் புனித மார்க்கத்தை ஊரூராக உபதேசித்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து இந்தியக் கலைஞர்களும் சென்று நாடெங்கும் கலை நிலையங்களை நிறுவ உதவி செய்தனர். பர்மாவில் பெளத்த தருமம் தன் ஆதிப் பரிசுத்தத் தன்மையோடு விளங்குவதை இன்றும் காணலாம். பர்மியர்களின் மதப் பற்றும், தயாள குனமும், பெரும்பாலான பிக்குகளின் நேர்மையான வாழ்க்கையும் அந்நாட்டிலே கல்வியையும் கலைகளையும் வளர்ப்பதற்கு உறுதுணையாக விளங்கின. பெளத்த நூல்கள் சம்பந்தமாகப் பர்மிய மன்னர்கள் கொண்டிருந்த ஆசைக்கு வடக்கு பர்மாவை ஆண்டுவந்த அனோரதா என்ற மன்னனை ஒர் உதாரணமாகக் கூறலாம். அக்காலத்தில் தென்பர்மாவிலே மட்டும் பாலி மொழியிலுள்ள அற நூல்கள் இருந்து வந்தன. அந்நாட்டு மன்னன் அந்த நூல்களை அனோரதாவுக்கு அளிக்க இசையவில்லை. அதனால் அனோரதா போர் தொடுத்துத் தென் பர்மாவின் மன்னனையும் அவன் சுற்றத்தாரையும் சிறைப்பிடித்து, அவர்களோடு பெளத்த நூல்களையும் கைப்பற்றிக்கொண்டு போய்விட்டான். பின்னால் அவ்வற நூல்களின் உயர்ந்த கருத்துக்களைப் படித்தபோது, அவன் உள்ளம் உருகிவிட்டது. தான் செய்த தவறுகளை உணர்ந்தான். அசோகரைப் போலவே அவனும் போரையும் பலாத்காரத்தையும் கைவிட்டு, நாடெங்கும் புத்தர்பிரானின் அருளறம் தழைக்கச் செய்தான். ஜாவா, சுமத்திரா முதலிய தீவுகளிலும் பெளத்தம் பரவியிருந்த பெருமையைப் பழைய சிற்பங்களின் மூலம் இன்றும் காண முடிகிறது. ஜாவாவில் பெளத்தமே முக்கிய சமயமாக இருந்து வந்தது. அங்கே ப்ோரோபுதுார் அருகே முண்டங் என்ற இடத்தில் ஒரு முழுக் குன்றையே குமடந்து பெளத்த ஸ்தூபமாகச் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு புத்தரின் பெரிய உருவச் சிலைகள் மூன்று இருக்கின்றன. இதை நேரில் பார்த்து வந்த ஆசியாவின் ஆஸ்தான கவிஞரான ரவீந்தியநாத்தாகுர், ஒரு மனித ஆயுளில் அந்தக் கோயிலை நிர்மானித்திருக்க முடியாதென்று அபிப்பிராயப்பட்டார். அக்கோயிலுள் நூற்றுக்கணக்கான புத்தரின் வடிவங்களும், புந்த ஜாதகக் கதைகளை விளக்கும் சித்திரங்களும் நிறைந்திருக்கின்றன. கல்லில் செதுக்கிய ஜாதகச் சித்திரங்கள் சிற்பக் கலைக்கே பெருமை தருவன, உயிரோடு துடிப்பன போன்ற கணக்கற்ற உருவங்கள்!... மற்றக் கோயில்களில் தேவ தேவி மூர்த்தங்களையும், இராமாயண மகாபாரதத்தின் சிலை உருவமான கதைகளையும் பார்த்தேன். இங்கே உலகையே காண்கிறேன். மனிதர் வாழ்க்கையில் நிகழும் எல்லா விஷயங்களையும் இங்கே பார்க்க முடிகிறது. அரசன் முதல் ஆண்டிவரை இடம் பெற்றிருக்கின்றனர். பெளத்த சமயத்தின் மகிமையால், எளியர், நீசர், உலகம் வெறுக்கும் பாதகர் அனைவருக்கும் 34 புத்த ஞாயிறு