பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யினும் சரி - தற்கால உலகின் சீர்கேடுகளை நீக்க, அவர்கள் தங்கள் உள்ளங்களைத் திறந்து வைத்தாற்போதும். புத்தரின் அருளொளி அவைகளிலே பாய்ந்து பரவிவிடும் உள்ளத்தைத் திறந்து வைத்தால்தான் ததாகதரின் அருளொளி உள்ளே புகமுடியும். மதுராபுரியில் வாழ்ந்து வந்த பிக்கு உபகுப்தர் இதைத்தான் கூறிவந்தார். உலக போகங்களிலே ஆழ்ந்திருந்த கணிகை வாசவதத்தைக்கு அவர் இந்தச் செய்தியைத்தான் சொல்லியினுப்பினார். அவளுக்காகத் தூதுவந்த தோழியிடம் அவர், 'அவள் வீட்டைச்சுத்தி செய்யட்டும்! தீபத்தை ஏற்றட்டும் கதவைத் திறக்கட்டும் அவசியம் வருகிறேன்! என்று உறுதி சொல்லியனுப்பினார். உபகுப்தர் வீடு' என்றது உள்ளத்தை, உள்ளத்திலுள்ள ஒட்டடைகளை நீக்கி, வெள்ளையடித்துச்சுத்தஞ் செய்வோம் ஞானச்சுடரை ஏற்றுவோம்! உள்ளத்தை இருட் சிறையாக்கி வைத்திருக்கும் ஆணவக் கதவுகளைத் திறந்து வைப்போம் புத்தர் வருவார், உறுதியாக வருவார் அவர் ஒளியில் உள்ளத் தாமரை உவப்புடன் மலரும். உலகப் பெருஞ் சமயங்களின் நடுவே பெளத்த தருமத்தின் நிலையை நன்கு தெரிந்து கொள்ளவும், அதற்கும் பிற சமயங்களுக்குமுள்ள வேற்றுமைகளைத் தெரிந்து கொள்ளவும் முதற்கண் வேதங்களையும் வைதிக சமயங்களையும் பற்றி ஒரளவு தெரிந்து கொள்ளல் அவசியம். 1ா புந்த ஞாயிறு