பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானல் நீயாகவே முடி றெது. பிறப்பு முதல் முதுமை வரை வாழ்க்கைதுக்க மயமாகவே யிருக்கிறது. முடி வில் மரணமென்ற பெருந் துக்கமும் ஏற்படுகிறது. மொத்தத்தில், நாம் விரும்பியவை கிடைத்தாலும் துக்கம், கிடையாவிடினும் துக்கமே நேருகிறது. இன்ப வேட்கை இவ்வாழ்க்கையில் மனிதன் எக்காலத்திலுமே திருப்தி கொண்டிருக்கவில்லை; எப்போதுமே துக்கத்திலிருந்து தப்புவதற்கு முயன்று வந்திருக்கிறான். இந்தத் துக்கத்தைக்கண்ட அறிஞர்கள், மக்களின் சுயநலத்தாலேயே துக்கம் பெருகிக் காண்கிறதென்றும், பரநலத்தை நாடுவதால் துக்கம் குறையுமென்றும் கூறுவர். ஆயினும், பிறப்பு, பிணி, பசி, பாசம், ஏமாற்றம், மூப்பு, இறப்பு ஆகிய எல்லாமுமே துக்கமயமாயிருப்பதை ஒழித்துவிட முடியாமல், மனிதன் தொன்றுதொட்டேஇவைகளிலிருந்து தப்ப வழிதேடி வந்திருக்கிறான். வாழ்க்கையில் தனக்குள்ள தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து, தான் எண்ணிய இன்பத்தை அழியாத இன்பத்தை அடைய மனிதன் முயன்றுகொண்டே வந்திருக்கிறான். தன் அறிவுக்கு எட்டியவரை அதைப்பற்றி அவன் ஆராய்ந்து வந்திருக்கிறான். 'வாழ்க்கை யென்பது என்ன? நான் ஏன் வந்தேன்? எங்கிருந்து வந்தேன்? இனி எங்கே செல்வேன்? என்ற வினாக்களுக்கு அவன் விடை காண முயன்று வந்திருக்கிறான். இவற்றிலிருந்து, 'நான் யார்? இந்தப் பிரபஞ்சம் யாது? இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு? பிரபஞ்சத் தோற்றத்தின் காரணம் யாது?’ என்ற கேள்விகளைப் பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கிறான். இந்த ஆராய்ச்சியின் பயனாகச் சமயம் அல்லது மதத்தை மனிதன் மேற்கொண்டான். மதம் மனிதனைப் படைக்கவில்லை, மனிதனே மதத்தைப் படைத்துக்கொண்டான். விடுதலை வேண்டி மனிதன் கொண்டிருந்த உள்ளாசையே மதமாகப் பரிணமித்தது என்பர். நீரைப் பற்றியும், நிலத்தைப் பற்றியும், காற்றைப் பற்றியும், கடலைப் பற்றியும், சேதனம், அசேதனம் பற்றியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவன் ஆராய்ந்து வந்திருக்கிறான். இந்த ஆராய்ச்சியோடு, தனது வாழ்வு - உயிர் - பற்றியும் சிந்தனை செய்து வந்திருக்கிறான். இவற்றிற்கெல்லாம் அவனுக்குத்துணையாயிருந்த கருவி ஒப்பற்ற கருவி - பகுத்தறிவு ஒன்றுதான். போதிய ஆராய்ச்சியில்லாமல் அவன் சில சமயங்களில் ஆழ்ந்த நம்பிக்கையினால் ஏற்றுக் கொள்ளும்

  • சேதனம் - அறிவுள்ள பிராணிகள். ** அசேதனம் - அறிவற்ற சடப்பொருள்கள்.

38 புத்த ஞாயிறு