பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷயங்களையும், பின்னால் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளவில்லை யென்றால், அவன் அவைகளைக் கைவிட்டு விடுகிறான். இருள் நிறைந்த உலகில் அவனுக்கு வழிகாட்டும் ஒரே கைவிளக்கு அந்த அறிவுதான். சமயங்களின் தோற்றம் மனிதன் பிரபஞ்சத்தோடும், தன்னைச்சுற்றி எங்கணும் காணப்படும் எல்லையற்ற உயிர்த்தொகுதியோடும் கொள்ளும் உறவே சமயம் எனப்படும். இந்த உறவு அவனுடைய பகுத்தறிவுக்கும், அவன் சேர்ந்துள்ள சமுதாயத்தின் அறிவுக் களஞ்சியத்திற்கும் ஏற்ற முறையில் அமைகின்றது. சமயங்களில் பல ஏற்பட்டிருக்கின்றன. இவை எப்போதும் ஒரே நிலையிலில்லாமல், தளர்ந்து வீழ்ச்சியடைந்த காலங்களும், மீட்சியடைந்த காலங்களும் உண்டு. சில சமயங்களில், வீழ்ச்சியுற்ற சமயத்தின் பீடத்தில் வேறு புதுச்சமயம் தோன்றுவதும் உண்டு. சமயங்களுக்குள்ளே சில வேற்றுமைகளிருப்பினும், மனிதனுடைய முக்கியமான கேள்விகளுக்கு அவையெல்லாம் அநேகமாக ஒரே மாதிரியான விடைகளையே அளிக்கின்றன. மனிதன் தன் செயல் ஒவ்வொன்றிலும் பகுத்தறிவைப் பயன்படுத்துவ தில்லை. பெரும்பாலும் உணர்ச்சியே அவனைச் செயலில் இறங்குமாறு துண்டுகிறது; பின்னரே அச்செயல் சரிதானென்று அவன் பகுத்தறிவால் ஆராய்ந்து தெளிகிறான். உணர்ச்சியால் உந்தப் பெற்ற மனிதன், பகுத்தறிவு பரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளும் செயல்களை உறுதியுடன் நிறைவேற்றும்படி செய்வது நம்பிக்கை உணர்ச்சியில்லா விடின், செயலில் கவர்ச்சியிராது. பகுத்தறிவில்லாவிடின், பல உணர்ச்சிகளின் நடுவே சிக்கித் தடுமாற நேரிடும்; நம்பிக்கையில்லா விடின், எதையும் முழுதும் நிறைவேற்ற முடியாது. ஏனெனில் மனிதன் ஒவ்வொரு நிலையிலும் உணர்ச்சியையும் பகுத்தறிவையும் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியாது; நம்பிக்கையோடு துணிந்து இறங்கினால்தான் வெற்றியடைய முடியும். மனிதனைச் செயற்படுத்தும் மூவகை ஆற்றல்களில் மூன்றும் ஒற்றுமையோடு ஒன்றுசேர்ந்து இயங்குதலே நலமாகும். இவைகளில் மூன்றாவதான நம்பிக்கையை மட்டும் கைக்கொண்டு ஒழுகினால், அது வெறும் குருட்டு நம்பிக்கை, அல்லது மூட பக்தியாகவே முடியும். இத்தகைய நம்பிக்கையை மட்டும் ஆதாரமாய்க் கொண்டே உலகிலே பெரும்பாலான மக்கள் சமயங்களைப் பின்பற்றி வருகின்றனர். மானிட ஆராய்ச்சிகளின் பயனாகச் சமயங்கள் தோன்றியிருப்பினும், குருமார்கள் உணர்ச்சியையும் பகுத்தறிவையும் கைவிட்டு மனிதன் தாங்கள் கூறும் கிரியைகளையும், தந்திரங்களையும், மந்திரங்களையும் மட்டுமே ப. ராமஸ்வாமி டி 39