பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடுகளையும் பறவைகளையும், விலங்குகளையும் பொதுவாக இயற்கை அனைத்தையுமே - பார்த்துப் படிக்க வேண்டிய பாடங்கள் ஏராளமாயுண்டு. சீனதேசத்து அறிஞர் ஒருவர், கோயிலருகே கிடந்த ஒரு கல்லைக்காட்டி, இறந்த காலத்திலிருந்த எல்லாப் புத்தர்களும், நிகழ்காலத்து எதிர்காலத்துப் புத்தர்கள் அனைவரும் இதிலே தங்கியிருக்கின்றனர் என்று கூறினாராம். பல சமயங்களில் ஏடுகளைவிட அதிகமாக எழுத்தறியாக் குழந்தைககளிடம் கற்கலாம். சொற்பொழிவு களைவிட மெளனமே அதிகப் போதனை செய்துவிடும். ஹ~யன்ஷா என்ற முனிவர் ஒருநாள் ஒரு கூட்டத்தினர்க்கு உபதேசஞ் செய்யச் சென்றிருந்தார். அவர் மேடைமீது ஏறிப்பேச முற்படுகையில், அருகே மரத்திலிருந்த பறவையொன்று இனிமையாகப் பாட ஆரம்பித்தது. "உபதேசம் நடந்து முடிந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டே ஹாயன்ஷா கீழிறங்கி விட்டார். தமது பேச்சைப் பார்க்கினும் பறவையின் இன்னிசையால் மக்களின் உள்ளங்கள் பண்பட்டிருக்குமென்று அவர் கருதினார். பறவையின் இசையே குருவின் உபதேசமொழியென்று கருதியது அவருடைய ஆழ்ந்த ஞானத்தையும் அடக்கத்தையும் காட்டுகின்றது. வேதங்களும் உபநிடதங்களும் உலகில் பல சமயங்களும் தத்துவ நூல்களும் தொன்றுதொட்டே ஏற்பட்டு வந்திருக்கின்றன. இன்றைக்குச் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு-1,000 ஆண்டுகளுக்கு உட்பட்டு-இந்திய ஆரிய மக்களின் வேதங்கள் தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வேதங்களில் தெய்வங்களுக்குரிய பல பிரார்த்தனைப் பாடல்கள் இருக்கின்றன. உண்மைப் பொருள் ஒன்றே என்ற கருத்துள்ள ஏகம் சத்' என்று ஒரே தெய்வ வணக்கத்தையும் அவை கூறுகின்றன. வேதங்களைத் தொடர்ந்து பின்னால் பிராம்மணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஏற்பட்டன. இவ்வாறு அற நூல்களும், தத்துவ நூல்களும் பல தோன்றின. ஆரியர்கள் சிந்து நதிக்கரையிலும், கங்கை நதிக்கரையிலும் குடியேறி, விவசாயம் செய்து, வேட்டையாடி, வாழ்க்கையின் தேவைகளான உணவு, Զ- ՃՃ Լ- , உறையுள் ஆகியவைகளைப் பற்றிய கவலைகள் குறைத்து, 'வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையுடன் இன்பமாக வாழ்ந்திருக்கையில் கூறப்பட்டவையே வேதங்கள். ஆரிய வேதங்கள் நான்கு: அவை இருக்கு வேதம், யஜுர்வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்பவை. இவை வெகு காலம் வாய் மொழியாகவே போற்றி வரப்பெற்றவை. அக்கால ஆரிய மக்களின் 42 ைபுத்த ஞாயிறு