பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையறிவும், கொள்கைகளும், வாழ்க்கை முறைகளும் இவைகளில் தொகுத்து வைக்கப் பெற்றிருக்கின்றன. இருக்கு வேதத்தில் தெய்வங்களுக்குரிய பிரார்த்தனைகள் இருக்கின்றன. கதிர், மதி, காற்று, மழை, தி முதலிய இயற்கையின் சக்திகள் தெய்வங்களோடு வர்ணிக்கப் பெற்றிருக்கின்றன. தெய்வங்கள் உண்டோ என்ற சந்தேகத்தைக் கிளர்த்தும் பாடல்களும் காணப்படுகின்றன. யஜுர் வேதம் யாக விதிகளைக்கூறுவது. இது யாகங்களிலே படிக்கப் பெறுவது; சாமவேதம் தே நடையிலுள்ளது. யாகங்களிலே இதை இசையோடு பாடுவர். அதர்வண வேதம் இறுதியாக வந்தது. மாந்திரிகங்கள், வசியத்திற்குரிய கிரியைகள் முதலியவை இதில் கூறப்படுகின்றன. மொத்தத்தில் வேதங்களில் பலதிறப்பட்ட விஷயங்கள் அடங்கியுள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, காலைக்கதிரின் வனப்பையும், மாலை மதியத்தின் தண்ணொளியையும், ஆறுகளின் அந்தமில்லாத இசைகளையும், மற்றும் இயற்கை யின்பங்களையும் அநுபவித்து மக்கள் முதன் முதற் பாடிய பாடல்களும், கூறிய வசனங்களும் இவைகளிலே யிருக்கின்றன. தெய்வங்களுக்கு உயிர்ப் பலியளித்துச் செய்யும் யாக முறைகளும் இவற்றில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பின்னால் தோன்றிய ஆரணியகங்களுக்கும் உபநிடதங்களுக்கும் வேதத்தின் முடிவு - வேதாந்தம்' - என்று பெயரளிக்கப்பட்டிருக்கிறது. மனிதன் முதன் முதலாக ஐம்புலன்களின் அறிவுக்கு எட்டாத விஷயங்களைப் பற்றித் தைரியமாக ஆராய்ந்தும், கற்பனை செய்தும் கண்டறிந்த விஷயங்கள் உபநிடதங்களிலே கூறப்படுகின்றன. உபநிடதங்கள், இறைவனும் மனிதனும் ஒன்று-ஜீவான்மாவும் பரமான்மாவும் ஒன்று - என்ற கொள்கையை வலியுறுத்துகின்றன. உலகமும் உயிர்களும் ஒரே பொருளின் தோற்றங்கள், ஆறுகள் ஒடிச்சென்று அலை கடலில் சேர்வது போல இவைகளும் முடிவில் அந்த ஒரே பொருளில் இரண்டறக் கலந்து ஒன்றாகிவிடுகின்றன. இக்கருத்தைச் சாந்தோக்ய உபநிடதம் சுவேதகேதுவின் கதை மிகவும் அழகாக எடுத்துக் காட்டுகின்றது. சுவேதகேது இருபத்திநான்கு வயது வரை குருகுலவாசம் செய்து, கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுத் தெரிந்துகொண்டு, வீடு திரும்புகிறான். அவன்தந்தை அவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார். அவர்களுடைய உரையாடல் வருமாறு: தந்தை: மகனே கண்ணால் காண முடியாததைக் காணவும், காதால் கேட்க முடியாததைக் கேட்கவும், உணர முடியாததை உணரவுங்கூடிய வித்தையை அறிந்து வந்திருக்கிறாயா? மகன்: அப்படி ஒரு ஞானம் இருக்கிறதா? ப. ராம ஸ்வாமி -