பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை: மகன்: தந்தை: மகன்: தந்தை: மகன்: தந்தை: மகன்: தந்தை: மகன்: தந்தை: மகன்: தந்தை: மகன்: தந்தை: ஒரு பிடி களிமண்ணைப் பற்றித் தெரிந்துகொண்டு பிறகு களிமண்ணாலான எல்லாப் பொருள்களும் களிமண்ணே யென்று அறிதல் போல, ஒன்றைக் கொண்டே மற்ற யாவற்றையும் அறியக்கூடியதே அந்த ஞானம். எனக்குப் போதித்த ஆசிரியர்களுக்கு அந்த ஞானம் தெரியாது. தெரிந்திருந்தால், அதை எனக்கும் போதித்திருப்பார். தாங்களே அதை எனக்கு அருள வேண்டும். சரி, போய் ஒர் ஆலம்பழம் கொண்டுவா! இதோ கொணர்ந்திருக்கிறேன். அதை விண்டுவை! விண்டாகிவிட்டது. அதில் என்ன தெரிகிறது? விதைகள் இருக்கின்றன - மிக நுண்ணிய விதைகள்! அந்த விதைகளில் ஒன்றைப்பிளந்து வை, பிளந்தாகிவிட்டது. அதில் என்ன காண்கிறாய்? ஒன்றுமில்லை! மைந்தா அதிலுள்ள - உன்னால் காணமுடியாத சத்து ஒன்றில்தான் மாபெரும் ஆலமரம் அடங்கியிருக்கிறது. பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள எல்லாவற்றினுடைய சத்தும் எதுவோ, அதில்தான் அதன் ஆன்மா இருக்கிறது. இன்னும் சற்றே விளக்கமாகச் சொல்லுங்கள் அவ்வாறேயாகட்டும். இந்த உப்பைத் தண்ணியில் போட்டு வைத்துவிட்டு, நாளைக் காலையில் என்னிடம் வா! மைந்தன் அப்படியே செய்தான். மறுநாட் காலை தந்தையிடம் சென்றபொழுது, அவர் தண்ணிரில் போட்டு வைத்த உப்பை எடுத்துவர் சொன்னார். சுவேதகேது சென்று பார்க்கையில் உப்பைக் காணவில்லை. தந்தை, உப்பைப் போட்ட நீரில் மேலாகக் கொஞ்சம் குடித்துப் பார்க்கும்படி சொன்னார். தந்தை: ாகன்: | -1 - புத்த ஞாயிறு எப்படியிருக்கிறது? உப்புக் கரிக்கிறது.