பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகவத்கீதை வேதங்கள், தெய்வங்களிலிருந்து சோமபாணம் வரை பல திறப்பட்ட விஷயங்களின் தொகுதிகளாயுள்ளன. உபநிடதங்கள் ஆன்மா, பரமான்மா பற்றிய விரிவான ஆராய்ச்சிகளாயுள்ளன. இவை ஆரிய முனிவர்களின் கருத்துக்களைச் சுருங்கிய அளவில் யாவர்க்கும் புலனாகும்படி வடித்துக் கொடுக்கவில்லை. அவ்வாறு வடித்துக் கொடுக்கத் தோன்றிய நூல் பகவத்கீதை மகாபாரதம், இராமாயணம் என்ற இதிகாசங்களில், கீதை முந்தியதில் ஒரங்கமாக அமைந்திருக்கிறது. முக்கியமான சில உபநிடதங்களும், வேதங்களுமே புத்தர் காலத்தில் இருந்திருக்கின்றன. ைேத அவர் காலத்தில் இருந்ததா என்பது சந்தேகமே மகாபாரதக்கதை மட்டும் மக்களிடையே வழங்கி வந்திருக்கலாம். ைேத உபநிடதப் பசுக்களின் பால் என்பர். உபநிடதங்கள், பிரும்ம சூத்திரம், கீதை ஆகிய மூன்றுமே இந்து சமயத்திற்குரிய பிரமான நூல்களாக பிற்காலத்தில் அமைந்துவிட்டன. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்களும் கெளரவர்களும் அணிவகுத்து நிற்கையில் கண்ணன் அருச்சுனனுக்குக் கீதையை உபதேசம் செய்ததாக மகாபாரதம் கூறும். மனித உடலே குருக்ஷேத்திரம், விவேகத்தின் மக்கள் பாண்டவர், குருட்டு அஞ்ஞானத்தின் மக்கள் கெளரவர், உடல் வாழ்வாகிய ராஜ்யத்திற்காக இருதிறத்தாருக்கும் போர் நடக்கிறது என்று கீதைக்கு உட்பொருள் கூறுவர். அவ்வாறாயின், அந்தப்போர் இன்னும் நடந்து கொண்டேயிருக்கிறது, மக்கட்குலம் உள்ளவரை நடந்துகொண்டேயிருக்கும். ைேத பல மொழிகளில வெளிவந்துள்ளது. மேலைநாடுகளில் தத்துவ ஆராய்ச்சி செய்யும் பல பேராசிரியர்கள் அதைப் போற்றியிருக்கின்றனர். முதன்முதலாக அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் 'கிழக்கு இந்தியக் கம்பெனியார் வெளியிடுகையில், அக்காலத்து ஆங்கில அரசாட்சித் தலைவராயிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் அப்பதிப்புக்கு முகவுரை எழுதியுள்ளார். கீழ்த்திசை நாடுகளின் தத்துவ நூல்களும் இலக்கியமும் மேலை நாட்டு ஞானக் களஞ்சியத்தின் ஒரு துளிக்குக்கூட இணையாகமாட்டா என்று இரு மாந்திருந்த ஆசிரியர் மெகாலே போன்றவருடைய மனப்பான்மையைவிட்டு, வாரன்ஹேஸ்டிங்ஸ், இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்திய நாட்டை இழக்க நேரலாம். ஆனால் இந்தியாவின் தோன்றிய இந்தப் பகவத் கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து செயல் முறைக்குக் கொண்டு வந்தால், இங்கிலாந்து

  • சோமம் - ஒரு வகைச் செடி. இதன் சாற்றைப் புளிக்க வைத்துப் பருகினால்

வெறியளிக்கும். 46 புத்த ஞாயிறு