பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு அளவுள்ளவை, எண்ணற்றவை. மெய்ப் பொருளும், ஆன்மாக்களும், பிரபஞ்சமும் சேர்ந்ததே உலகம். மாத்வாசாரியருடைய சித்தாந்தம் துவைதம் - இரண்டாகப் பேதமுடையது. அதன்படி பிரபஞ்சம், ஆன்மா, பரம்பொருள் மூன்றும் அநாதியானவை, அவைகளுக்குத் துவக்கமுமில்லை, முடிவுமில்லை: யம்ெ ாருள் பிரபு பஞ்சத்தை ஆட்சி செய்கின்றது; ஆனால் த லகமும் ஜீவனும் பரம் பொருளுக்கு வேறானவை. முக்தி பெற்ற பின்பும் ஆன்மா வேறு. பரம்பொருள் வேறு. மேலும், ஐந்து வேற்றுமைகளை (பஞ்ச பேதங்களை) மாத்வர் வற்புறுத்தியுள்ளார். இறைவனுக்கும் தனி ஆன்மாவுக்குமுள்ள வேற்றுமை, இறைவனுக்கும் டப் பொருளுக்குமுள்ள வேற்றுமை, தனி ஆன்மாவுக்கும் சடத்துக்குமுள்ள வேற்றுமை, ஒரு சடப்பொருளுக்கும் மற்றொன்றுக்குமுள்ள வேற்றுமை. உலகம் கடவுளின் வேற்றுருவம் அன்று என்றும், அது கடவுளின் உடல் அன்று என்றும், இரண்டு ஆன்மாக்கள்கூட ஒன்றுபோலில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பக்தியே முக்திக்கு வழி. இறையருளாலேயே அந்த முக்தியைப் பெறலாம். முக்திக்குப் பின்பும் ஆன்மா இறை நிலையை и от и г.). சித்தாந்த சைவம் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று சித்தாந்தங்களோடு, தென்னாட்டில் சைவ சித்தாந்தமும் பிறப்பாகத் திகழ்ந்து வரும் சமயம், இதுவும் பிரும்ம சூத்திரத்தை ஆதாரமாய்க் கொண்டது. இதற்கு வேதம் பொதுநூல். 'ஆகமம் சிறப்பு நூல், வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம் என்பர். எது எபபோது தோன்றியது என்று கூற இயலாத முறையில் மிகத்தொன்மையான காலம் முதலேயிருந்து வருவது. ஆயினும், பிற்காலத்தில் மெய்கண்டார் இதைச் சித்தாந்த உருவில் அமைத்தார். அவருடைய 'சிவஞான போதம் இதன் தத்துவங்களை விளக்குவது. பின்னால் இதற்கு உரையும், சார்பு நூல்களும் தோன்றின. சைவம் முப்பொருளுண்மையை வலியுறுத்தும். உலகு, உயிர், கடவுள் மூன்றுமே அநாதி நித்தியமானவை என்பது அதன் கோட்பாடு. உலகம் சடப் பொருளாயிருப்பினும், அதுவும் தனியிருப்புடையது. அறிவுப் பொருளின் முயற்சியால் அதுவும் தொழிற்படும். ஜீவான்மாவாகிய உயிரும் என்றுமுள்ளது. அது அறிவற்ற சடப்பொருளாகவோ, முற்றறிவுள்ள சித்துப் பொருளாகவோ இல்லை; சடத்தோடு இயைந்து சடமாயும், சித்தோடு இயைந்து சித்தாயும் இயங்குகிறது. இம்மையிலும் மறுமையிலும் அதன் அறியாமை நீங்கியொழிவதில்லை. ஆனால் முக்தியில் அறியாமை ப. ராமஸ்வாமி 0 M 9