பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வழிப்படுத்தும்படி கூறிய கருணை மார்க்கம் அவருக்கு உடன்பாடன்று. ஈரான் போன்ற விவசாய நாட்டில் கால்நடைகள் பேணப்படுவது இயற்கை. பசுவை மிக்க அன்புடன் பேணி வளர்க்கும்படி மதவிதிகள் இருக்கின்றன. இந்துக்களைப் போலவே ஈரானியர்களுக்கும் பசு புனிதமானது. அவர்களுடைய சமயத்தில் உழவுத் தொழிலுக்கு உன்னதமான இடமளிக்கப் பெற்றிருந்தது. பதினாயிரம் பிரார்த்தனைகள் செய்பவனைப் பார்க்கினும் நிலைத்தைப் பண்படுத்திக் கவனத்தோடு விதைத்துப் பயிரிடுவோனே மேலானவள் என்று போதிக்கப்பட்டது. ஜாரதுஸ் டிர சமயத்தைச் சேர்ந்த பார்சிகள் பினங்களை எரிப்பது மில்லை, புதைப்பதுமில்லை; 'தோக்மா என்ற உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் திறந்த வெளியில் அவைகளைக் கொண்டுபோய் வைத்தலே வழக்கம். கோபுரத்தின் உச்சியில் கழுகுகள் வந்து பினங்களை உடனே தின்றுவிடுவதற்காக இவ்வாறு செய்யப்படுகின்றது. மேலும் பார்சிகள் தீயையும், நீரையும், சந்திரனையும், சூரியனையும் வணங்குவதைக் காண்போர், இவையே அவர்களின் தெய்வங்களென்று எண்ணுவர். அவ்வாறில்லை. இவைகளை இறைவனின் சின்னங்களாகவே அவர்கள் வணங்குவர். இந்திய ஆரிய எரியோம்பி வந்ததையும், அக்கினியில் பெய்த யாகப் பொருள்களை அக்கினி தேவன் குறித்த தெய்வங்களிடம் கொண்டு சேர்ப்பானென்று நம்பியதையும் போன்ற வழக்கங்கள் இவை. அக்கினி ஆண்டவனின் சோதியையும் பரிசுத்தத் தன்மையையும் விளக்குவதால், அதையே அவனுக்கு அறிகுறியாகப் பார்சிகள் கொண்டாடுகின்றனர். மற்றைப்படி ஈரான் நாட்டினர் என்றுமே சிலைகளை வைத்து வணங்கியதில்லை. ஆன்மா அழிவற்றது, மனிதன் மரித்த பின்பு அவனுடைய ஆன்மா, அவன் செய்த நன்மை தீமைகளுக்குத் தக்க படி , கவர்க்கத்தையோ நகரத்தையோ அடையுமென்று ஜாரதுஸ் டிரர் உபதேசித்து வந்தார். ஆனால் சுவர்க்கத்தைப் பற்றியும், நரகத்தைப் பற்றியும் விரிவான கதைகளை அவர்கட்டிக்கூறவில்லை. உபவாசங்களால் உடலை வருத்தித் தவஞ் செய்யும்படி அவர் கூறவில்லை. கண்களாலும், நாவுகளாலும், காதுகளாலும், கைகளாலும், கால்களாலும், பாவம் செய்யாதிருத்தலே எங்களுக்கு உபவாசம்' என்று அவருடைய சமய நூல் ஒன்று கூறுகின்றது. அஹ-ர மஸ்தாவாகிய இறைவன் உலகில் நற்செயல்களுக்கெல்லாம் காரணனாயிருப்பது போல் அஹ்ரிமன் (தேவர்களாகிய தீயவர்களின் தலைவன்) தீமைகளையெல்லாம் படைப்பவனென்று ஜாரதுஷ்டிர சமயம் கூறும். ஜாரதுஸ் டிரர் பெரிய கல்விமான். அவர் 30 வயதில் சமயப் பிரச்சாரம் செய்ய முற்பட்டு 77 வயது வரை வாழ்ந்திருந்தார். அறவுரைகள் 54 புத்த ஞாயிறு